உலக செய்திகள்

பிரேசில் விமான நிலையத்தில் 750 கிலோ தங்கம் கொள்ளை; போலீஸ் உடையில் வந்து கொள்ளையர்கள் கைவரிசை + "||" + 750 kg of gold looted at Brazil airport

பிரேசில் விமான நிலையத்தில் 750 கிலோ தங்கம் கொள்ளை; போலீஸ் உடையில் வந்து கொள்ளையர்கள் கைவரிசை

பிரேசில் விமான நிலையத்தில் 750 கிலோ தங்கம் கொள்ளை; போலீஸ் உடையில் வந்து கொள்ளையர்கள் கைவரிசை
பிரேசிலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் உள்ள சாவ் பாலோ நகர விமான நிலையம் நேற்று முன்தினம் மாலை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

பிரேசிலியா, 

2 கார்களில் ஆயுதங்களுடன் போலீஸ் உடையில் வந்தவர்கள் விமான நிலையத்தின் சரக்கு முனையத்துக்கு சென்றனர். சரக்கு கிடங்கில் இருந்து விமானத்துக்கு சரக்குகளை எடுத்து செல்லும் வேன் ஒன்றை அவர்கள் வழிமறித்தனர். 

அந்த வேனில் இருந்த 750 கிலோ தங்கத்தை எடுத்துக்கொண்டு விமான நிலையத்தில் இருந்து சென்றனர். பின்னர் அவர்கள் போலீசார் அல்ல கொள்ளையர்கள் என தெரியவந்தது.

அதுமட்டுமல்ல அந்த கொள்ளை கும்பல், விமான நிலைய சரக்கு முனையத்தின் தலைவருடைய குடும்பத்தை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து அவரை மிரட்டி, தங்கம் எந்த வேனில் எடுத்து செல்லப்படுகிறது என்கிற தகவலை பெற்று, திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

பலத்த பாதுகாப்பு மிக்க விமான நிலையத்துக்குள் கொள்ளையர்கள் போலீஸ் உடையில் வந்து, தங்கத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.