முன்பு நினைத்ததை விட சந்திரன் மிகவும் பழமையானது: ஆய்வில் தகவல்


முன்பு நினைத்ததை விட சந்திரன் மிகவும் பழமையானது: ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 30 July 2019 11:39 AM GMT (Updated: 30 July 2019 11:39 AM GMT)

முன்பு நினைத்ததை விட சந்திரன் மிகவும் பழமையானது என ஆய்வில் தெரிய வந்து உள்ளது.

சூரிய குடும்பம் உருவாகி சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரன் உருவானது. ஒரு ஆய்வின்படி, சந்திர உடல் முன்பு நம்பப்பட்டதை விட கணிசமாக பழமையானது என ஆய்வு  கூறுகிறது. முந்தைய ஆராய்ச்சியில் சூரிய குடும்பம் உருவாகி சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரன் உருவாகியிருப்பதாக மதிப்பிட்டிருந்தது.

ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையிலான புதிய ஆய்வில், 4.56 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பம் உருவான பிறகு, சந்திரன் சுமார் 4.51 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு  உருவானது என்று கண்டறியப்பட்டது. அப்பல்லோ பயணங்களின் போது சேகரிக்கப்பட்ட பல்வேறு வகையான மாதிரிகளின் வேதியியல் கலவையை ஆய்வு செய்து  இந்த ஆய்வை நடத்தி உள்ளனர். இந்த தகவல் நேச்சர் ஜியோசைன்ஸ் இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

ஜூலை 21, 1969 இல், முதன் முதலில் மனிதன் சந்திரனில் காலடி வைத்தான்.  சந்திர மேற்பரப்பில் அவர்கள் சில மணி நேரங்கள் இருந்தனர். அப்போது அப்பல்லோ  குழுவினர் 21.55 கிலோ மாதிரிகளை சேகரித்து மீண்டும் பூமிக்கு கொண்டு வந்தனர்.

வெவ்வேறு காலங்களில் உருவான பாறைகளில் உள்ள வெவ்வேறு கூறுகளின் ஒப்பீட்டு அளவுகளை ஒப்பிடுவதன் மூலம், ஒவ்வொரு மாதிரியும் சந்திரனில்  உட்புறத்துடனும், மாக்மா கடலின் திடப்படுத்தலுடனும் எவ்வாறு தொடர்புடையது என்பதை அறிய முடியும் என  கொலோன் பல்கலைக்கழக ரவுல் பொன்சேகா கூறினார்.

Next Story