ஆதிகால கடல் உயிரினத்தின் நூற்றுக்கணக்கான புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு


ஆதிகால கடல் உயிரினத்தின் நூற்றுக்கணக்கான புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 31 July 2019 8:55 AM GMT (Updated: 31 July 2019 8:55 AM GMT)

கனடாவில் ‘ஸ்டார் வார்ஸ்’ விண்கலத்தை ஒத்த தலையுடன் கூடிய ஆதிகால கடல் உயிரினத்தின் நூற்றுக்கணக்கான புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கனடாவில் உள்ள கூட்டெனே தேசிய பூங்கா பாறைகளில் இந்த அரிய புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ‘கேம்ப்ரோராஸ்டர் ஃபால்கடஸ்’  என்று அழைக்கப்படும் இந்த உயிரினம் இன்றைய ‘ஆர்த்ரோபாட்’ வகை விலங்குகளின் குடும்பத்தை சார்ந்தது என்றும், அவை 506 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ‘கேம்ப்ரியன் காலகட்டத்தில்’ வாழ்ந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.



மேலும் இந்த விலங்குக்கு ‘ஸ்டார் வார்ஸ்’ விண்கலத்தை ஒத்த தலையும், சிறிய அளவிலான உடலும் இருந்திருக்கலாம் எனவும், மேல்நோக்கி இருக்கும் கண்கள் கொண்ட இந்த உயிரினம் சேற்றில் இருக்கும் புழுக்கள், மீன்களை உண்டு வாழ்ந்திருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story