சிறிய தட்டு அளவுள்ள சிலந்தி பூச்சியை விரட்ட பேஸ்புக்கில் உதவி கேட்ட பெண்


சிறிய தட்டு அளவுள்ள சிலந்தி பூச்சியை விரட்ட பேஸ்புக்கில் உதவி கேட்ட பெண்
x
தினத்தந்தி 31 July 2019 1:33 PM GMT (Updated: 31 July 2019 1:33 PM GMT)

ஆஸ்திரேலியாவில் தனது வீட்டில் இருந்த சிறிய தட்டு அளவுள்ள சிலந்தி பூச்சியை விரட்ட பெண் ஒருவர் பேஸ்புக்கில் உதவி கேட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து நகரில் டவுன்வில்லே பகுதியில் வசித்து வருபவர் லார்ரீ கிளார்க்.  வெளியில் சென்று வீடு திரும்பிய இவர் தனது வரவேற்பறைக்கு சென்றுள்ளார்.

அங்கு இவரை சிறிய தட்டு அளவுள்ள சிலந்தி பூச்சி ஒன்று வரவேற்றுள்ளது.  25 செ.மீ. அளவில் பிரவுன் நிறத்தில் அறையின் மேற்கூரையில் இருந்த அந்த பூச்சியை தனது மொபைல் போன் வெளிச்சத்தில் கிளார்க் நெருங்கி உள்ளார்.  பதிலுக்கு அந்த பூச்சியும் தனது கொடுக்குகளையும், கால்களையும் தூக்கி கொண்டு அவரை நோக்கி முன்னே வந்துள்ளது.

இதனால் அச்சமடைந்த அவர் அங்கிருந்து ஓடி வந்து விட்டார்.  இதன்பின் தனது பேஸ்புக்கில் சிலந்தி பூச்சி நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இதனை விரட்ட என்ன செய்ய வேண்டும்? என உதவி கேட்டுள்ளார்.

இதற்கு ஒருவர், உங்களது வீட்டை தீயிட்டு கொளுத்தி விடுங்கள்.  அதற்கான நேரமிது என பதிவிட்டு உள்ளார்.  சிலர், அதனிடம் வாடகை கேளுங்கள் என தெரிவித்துள்ளனர்.  அதனை தீயிலிட்டு கொல்லுங்கள் என அதிகளவிலானோர் தெரிவித்து உள்ளனர்.

இதனிடையே, சிலந்தி பூச்சியை பாதுகாப்புடன் பிடித்து வெளியே விட்டு விட்டேன் என்று கிளார்க் தனது மற்றொரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

Next Story