அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும்- தலிபான் நம்பிக்கை


அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும்- தலிபான் நம்பிக்கை
x
தினத்தந்தி 1 Aug 2019 12:02 PM GMT (Updated: 1 Aug 2019 12:02 PM GMT)

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என தலிபான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,
    
 கத்தார் தலைநகர் தாகாவில் நடைபெறவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் உடன்பாடு ஏற்படும் என தலிபான் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. 

தாகாவில் உள்ள தலிபான் தலைமையகத்தின் தலைவர் சுகைல் ஷாகின் கூறுகையில் ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த கடந்த ஒரு வருடமாக தாங்கள் முயன்று வருவதாகவும் இது குறித்த வரைவு அறிக்கையை வெளியிட்டிருப்பதாகவும் கூறினார்.அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் பதிலுக்கு ஆப்கானிஸ்தானில் தலிபானின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பன்னாட்டுத் தீவிரவாதம் ஒழிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அளிப்பதாகவும் கூறினார். 

 அமெரிக்காவின் கைப்பாவையாக ஆப்கானிஸ்தான் அரசு செயல்படுவதாக தலிபான் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் பிரதமர் அஷ்ரப் கானியுடன் பேச்சுவார்தையில் ஈடுபட தலிபான் தொடர்ந்து மறுத்து வந்தது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடனான பேச்சுவார்தைக்கு தலிபான் உடன்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Next Story