நண்பர்கள் தினத்தையொட்டி இந்தியாவிற்கு வாழ்த்து தெரிவித்த இஸ்ரேல்!


நண்பர்கள் தினத்தையொட்டி இந்தியாவிற்கு வாழ்த்து தெரிவித்த இஸ்ரேல்!
x

நண்பர்கள் தினத்தையொட்டி இந்தியாவிற்கு இஸ்ரேல் தூதரகம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

டெல் அவிவ்,

நட்பு தினத்தை முன்னிட்டு இஸ்ரேல் தூதரகம்  இந்தியாவிற்கு வாழ்த்து தெரிவித்து, 1975 ஆம் ஆண்டு பாலிவுட் படத்தின் "ஷோலே" - "யே தோஸ்தி" பாடலின் ஒரு வரியை குறிப்பிட்டு வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

"இனிய #நட்புநாள்2019 இந்தியா! எப்போதும் எங்களது வலுவான நட்பும், கூட்டாண்மையும் வளர்ந்து அதிக உயரங்களைத் தொடும்" என்று  இஸ்ரேலிய தூதரகம் டுவீட் செய்தது.

"யே தோஸ்தி ஹம் நஹி டோடெங்கே (இந்த நட்பை நாங்கள் உடைக்க மாட்டோம்)" என்று டுவீட் இந்தியில் சேர்க்கப்பட்டுள்ளது. இது புகழ்பெற்ற பாடலின் ஒரு வரி ஆகும். இதில் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திரா ஆகியோர் நடித்திருப்பார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கைகுலுக்கி அரவணைக்கும் புகைப்படங்களின் தொகுப்பும் இதில் இடம்பெற்றுள்ளது.

கடந்த மாதம், செப்டம்பர் 17 -ம் தேதி  தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, டெல் அவிவில் உள்ள ஆளும் கட்சியான "லிக்குட்" கட்சி தலைமையகத்தில் இருந்து மோடியின் 10 மாடி உயர் சுவரொட்டிகள் அவரது இஸ்ரேலிய எதிர்ப்பாளருடன் தொங்க விடப்பட்டன.

அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிபர்களான டொனால்டு டிரம்ப் மற்றும் விளாடிமிர் புதின் நெதன்யாகுவுடன் இருக்கும் சுவரொட்டிகளும் தொங்கவிடப்பட்டது.

மோடியின் இரண்டாவது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த முதல் உலகத் தலைவர்களில் இஸ்ரேலிய பிரதமரும் ஆவார்.

2017 ல் மோடி இஸ்ரேலுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.  நெத்தன்யாகு 2018 ஜனவரியில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டது நினைவுகூறத்தக்கது.


Next Story