ஈரானில் மேலும் ஒரு வெளிநாட்டு கப்பல் சிறை பிடிப்பு - பாரசீக வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகரிப்பு


ஈரானில் மேலும் ஒரு வெளிநாட்டு கப்பல் சிறை பிடிப்பு - பாரசீக வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 4 Aug 2019 11:30 PM GMT (Updated: 4 Aug 2019 8:55 PM GMT)

ஈரானில் மேலும் ஒரு வெளிநாட்டு கப்பல் சிறை பிடிக்கப்பட்டதால், பாரசீக வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

டெஹ்ரான்,

அணுஆயுத பரவலை தடுக்கும் விதமாக ஈரானுடன் ஏற்படுத்திக்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது முதல் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த பிரச்சினை பாரசீக வளைகுடா பகுதியில் கடுமையாக எதிரொலித்து வருகிறது.

கடந்த மாதம் 13-ந்தேதி பாரசீக வளைகுடாவின் ஹோர்முஷ் ஜலசந்தி அருகே சென்று கொண்டிருந்த வெளிநாட்டு சரக்கு கப்பல் ஒன்றை ஈரான் சிறைபிடித்தது. எரிபொருள் கடத்தியதால் கப்பலை சிறை பிடித்ததாக ஈரான் கூறியது. அதே போல் தங்கள் நாட்டின் மீன்பிடி கப்பல் மீது மோதியதாக கூறி, இங்கிலாந்து நாட்டின் சரக்கு கப்பலையும் ஈரான் சிறைபிடித்தது. இந்த விவகாரத்தில் இங்கிலாந்து-ஈரான் இடையே மோதல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், அரபு நாடுகளுக்கு எரிபொருள் கடத்திச் சென்றதாக கூறி வெளிநாட்டு சரக்கு கப்பல் ஒன்றை ஈரான் நேற்று சிறைபிடித்தது. மேலும் அந்த கப்பலில் இருந்த 7 மாலுமிகளை ஈரான் படையினர் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு கப்பல் எந்த நாட்டுக்கு சொந்தமானது. கைது செய்யப்பட்ட மாலுமிகளில் இந்தியர்கள் யாரும் இருக்கின்றனரா என்பன உள்ளிட்ட தகவல்கள் தெரியவில்லை.


Next Story