உலக செய்திகள்

லிப்ட் ஒன்றில் சிக்கி கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட சகோதரனின் உயிரை காப்பாற்றிய சிறுமி - வீடியோ + "||" + Video: Sister's Quick-Thinking Saves Boy Who Got Hung By Rope

லிப்ட் ஒன்றில் சிக்கி கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட சகோதரனின் உயிரை காப்பாற்றிய சிறுமி - வீடியோ

லிப்ட் ஒன்றில் சிக்கி கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட சகோதரனின் உயிரை காப்பாற்றிய சிறுமி - வீடியோ
லிப்ட் ஒன்றில் சிக்கி கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட சகோதரனின் உயிரை சிறுமி ஒருவர் காப்பாற்றி பாராட்டை பெற்று உள்ளார்.
குடியிருப்பில் 3 சிறுவர்கள்  லிப்ட்டில் ஏறுகிறார்கள். அப்போது லிப்ட் நகர்ந்ததும் லிப்ட் கதவில் மாட்டிய கயிறு  ஐந்து வயது சிறுவன் கழுத்தில் மாட்டி மேலே தூக்கப்பட்டான். உடனடியாக சிறுவனின் சகோதரி வேகமாக செயல்பட்டு சிறுவனின் கழுத்தில் மாட்டிய கயிறை அகற்றினார். இதனால் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். இந்த சம்பவம் துருக்கியின் இஸ்தான்புல்லில் கடந்த புதன்கிழமை நடந்ததாக தி மிரர் தெரிவித்துள்ளது.

இந்த கடினமான நேரத்தில்  சகோதரி நிதானமாக  நிலைமையை கையாண்டதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

''அந்த பெண் மிக முக்கியமான சூழ்நிலையில்  மிக விரைவாக கையாண்டார்'' என்று வீடியோவுக்கு பதிலளித்த ஒருவர் கூறி உள்ளார். பதட்டமில்லாமல் நிலமையை கையாண்டது மிகவும் நல்லது  என மற்றொருவர் கூறி உள்ளார்.

உள்ளூர் தகவல்களின்படி, சிறுவன் உடல்நிலை தற்போது சரியில்லாமல் இருப்பதாகவும்,  குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பறக்கும் தட்டில் பறந்து சென்ற வேற்றுகிரகவாசிகள்; திகிலூட்டும் வீடியோ காட்சி
கலிபோர்னியாவில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தோன்றும் வினோதமான வீடியோ முதல் முறையாக வெளியாகியுள்ளது.
2. நிர்வாண புகைப்படங்களை அனுப்பி, ஆஸ்திரேலியா காட்டுத் தீ மீட்பு பணிக்கு ரூ.5 கோடி வசூல் செய்த மாடல் அழகி
நிர்வாண புகைப்படங்களை அனுப்பி ஆஸ்திரேலியா காட்டுத் தீ மீட்புப் பணிக்காக 7 லட்சம் டாலர்களை இன்ஸ்டா மாடல் ஒருவர் வசூல் செய்துள்ளார்.
3. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு பளார் அறை விட்ட பாகிஸ்தான் அமைச்சர்
டிக் டாக் பெண் பிரபலத்துடன் தன்னை தொடர்புபடுத்தி பேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரை பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சவுத்ரி கன்னத்தில் அறைந்துள்ளார்.
4. சீனாவில், சமையல் பாத்திரத்திற்குள் தலை சிக்கி தவித்த குழந்தை பத்திரமாக மீட்பு
சீனாவில் சமையல் பாத்திரத்திற்குள் தலையைவிட்டு மாட்டிக்கொண்ட குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
5. விலங்கியல் பூங்காவில் புலிக்கூண்டுக்குள் சென்றவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
சவுதி அரேபியாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் புலியால் தாக்கப்பட்டவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.