அக்டோபரில் இந்தியா வருகிறார் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா


அக்டோபரில் இந்தியா வருகிறார் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா
x
தினத்தந்தி 5 Aug 2019 4:18 PM GMT (Updated: 5 Aug 2019 4:18 PM GMT)

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா வரும் அக்டோபர் மாதம் இந்தியா சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

டாக்கா, 

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசம், இந்தியாவுடன் நல்லுறவை பேணி வருகிறது.  கடந்த 10 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் இருநாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளன. இவற்றுள் 68 ஒப்பந்தங்கள் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் கையெழுத்தானவை ஆகும்.  இந்த சூழலில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா வரும் அக்டோபர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். 

3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக ஷேக் ஹசீனா இந்தியா வருகை தர உள்ளார்.  இந்த தகவலை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. ஷேக் ஹசீனாவின் பயணம் குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஏகே அப்துல் மோமன்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  இந்திய வெளியுறவுத்துறை மந்திரி கடந்த ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வங்காளதேசம் வந்திருந்த போது, ஷேக் ஹசீனாவின் இந்தியப்பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இரு நாடுகளுக்கும் இடையே, பல ஆண்டுகளாக இருந்த எல்லைக்கோடு பிரச்சினை தீர்க்கப்பட்டது.  கடல்சார் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டன ஆனால், டீஸ்டா நதி நீரை சரிபங்காக பிரிப்பது இப்போதும் தீர்க்கப்படவில்லை. ஜெய்சங்கர் பயணத்தின் போது டீஸ்டா நதி நீர் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் இது பற்றி வேறு எந்த தகவலும் தெரிவிக்க முடியாது” என்றார். 

Next Story