உலகில் கால்பகுதி மக்கள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகிறார்கள் ஆய்வில் தகவல்


உலகில் கால்பகுதி மக்கள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகிறார்கள் ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 6 Aug 2019 11:27 AM GMT (Updated: 6 Aug 2019 11:27 AM GMT)

உலக மக்கள் தொகையில் கால்பகுதி மக்கள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகிறார்கள் என்று உலக நீர்வள ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் உலகின் பல நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.

உலக நாடுகளில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து உலக நீர்வள ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் உலகின் 17 நாடுகள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை  எதிர்கொண்டுள்ளதாகவும்  இதில் இந்தியாவுக்கு 13 வது இடம் என கூறி உள்ளது

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “ உலகின் சுமார் 17 நாடுகளில் உள்ள மக்கள்  கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர். அவற்றில் பல நாடுகள்   நீர் முழுவதும் தீர்ந்து போகும் நாள் நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றன.

அந்த நாடுகளின் விவரம், கத்தார், இஸ்ரேல், லெபனான், ஈரான், ஜோர்டான், லிபியா, குவைத், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், சான் மரினோ, பக்ரைன், இந்தியா, பாகிஸ்தான், ஓமன், துர்மெனிஸ்தான், போட்ஸ்வானா, எரித்ரியா ஆகும்.

இந்த நாடுகளில் விவசாயம், தொழில் மற்றும் நகராட்சிகள் சராசரியாக கிடைக்கக்கூடிய மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீரில் 80 சதவீதத்தை சராசரியாக ஒரு வருடத்தில் குடித்து வருகின்றன.

இந்த நாடுகளில் தேவை அதிகரிக்கும்போது சிறிய அளவிலான வறட்சி கூட பருவ நிலை மாற்றம் காரணமாக பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு உதாரணமாக கேப் டவுன், சென்னையில் ஏற்பட்ட வறட்சியை குறிப்பிடலாம்.

நிலத்தடி நீர் அதிகமுள்ள நாடுகளில் மெக்சிகோ, நேபாளம், போர்ச்சுக்கல், மொராக்கோ உள்ளிட்ட 27 நாடுகள் உள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்த சராசரி நீர் அழுத்தத்தைக் கொண்ட நாடுகளில் கூட மோசமான வெப்பப்பகுதிகள் இருக்கக்கூடும் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா 71 வது இடத்தில் உள்ளது, நியூ மெக்சிகோ மாநிலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இணையாக நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.

Next Story