காஷ்மீர் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் - அமெரிக்கா சொல்கிறது


காஷ்மீர் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்  - அமெரிக்கா சொல்கிறது
x
தினத்தந்தி 8 Aug 2019 1:09 PM GMT (Updated: 8 Aug 2019 1:09 PM GMT)

காஷ்மீர் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என அமெரிக்கா கூறியுள்ளது.


காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கிறது. இதற்கு பாகிஸ்தான் ஏற்கனவே கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தது. 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசும்போது, இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் பொதுச்சபையில் எழுப்புவோம் என்று தெரிவித்தார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், இந்தியாவுடன் தூதரக, வர்த்தக உறவை துண்டிக்க பாகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் காஷ்மீர் நிலவரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் பேசுகையில், காஷ்மீர் விவகாரத்தை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த முடிவுகள், எல்லையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறோம். இரு நாடுகளும் பொறுமையுடன் இருக்க வேண்டும். இப்போதைய அவசர தேவை, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதுதான். அதே சமயத்தில், தனிநபர் உரிமைகளை மதித்து நடக்க வேண்டும்  எனக் கூறியுள்ளார். 


Next Story