இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய தயார் பாகிஸ்தான் சொல்கிறது
இந்தியாவுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய தயாராக இருக்கிறோம் பாகிஸ்தான் சொல்கிறது.
இஸ்லாமாபாத்,
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு பதிலடி தருவதற்காக, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரை நேற்று முன்தினம் பாகிஸ்தான் வெளியேற்றியது. இந்தியாவுடனான தூதரக உறவுகளை குறைத்துக்கொண்டது.
மேலும், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பாகிஸ்தான் நேற்று நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், இந்த நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் திடீரென அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஷா மஹ்முத் குரேஷி கூறியதாவது:-
காஷ்மீர் தொடர்பான முடிவுகளை அவர்கள் (இந்தியா) மறுபரிசீலனை செய்ய தயாராக இருக்கிறார்களா? அதற்கு சம்மதித்தால், இந்தியாவுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய நாங்களும் தயாராக இருக்கிறோம். மறுபரிசீலனை இருதரப்பிலும் நடக்க வேண்டும். சிம்லா ஒப்பந்தம் அப்படித்தான் சொல்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story