சீனாவின் கிழக்கு பகுதிகளை ‘லெகிமா’ என்ற சக்திவாய்ந்த புயல் தாக்க வாய்ப்பு


சீனாவின் கிழக்கு பகுதிகளை ‘லெகிமா’ என்ற சக்திவாய்ந்த புயல் தாக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 9 Aug 2019 10:15 PM GMT (Updated: 9 Aug 2019 8:38 PM GMT)

சீனாவின் கிழக்கு பகுதிகளை ‘லெகிமா’ என்ற சக்திவாய்ந்த இன்று புயல் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


* சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்லிப் மாகாணத்தில் சில நாட்கள் அமலில் இருந்த போர் நிறுத்தத்திற்கு பிறகு, மீண்டும் அரசுப்படைகள் தாக்குதலை தொடங்கி இருக்கின்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் அச்சத்தில் வாழ்வதாக ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது.

* சீனாவின் கிழக்கு பகுதிகளை ‘லெகிமா’ என்ற சக்திவாய்ந்த புயல் இன்று (சனிக்கிழமை) தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடுத்த 2 தினங்களுக்கு மிக தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்கும்படி வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

* மெக்சிகோவின் வடக்கு மாகாணமான மிச்சோகனில் உள்ள மேம்பாலம் ஒன்றில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 19 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையேயான மோதலில் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

* அமெரிக்காவுக்கான தென்கொரிய தூதராக லீ சூ ஹூய்க் என்பவரை அதிபர் மூன் ஜே இன் நியமனம் செய்துள்ளார். லீ சூ ஹூய்க் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீது அதிருப்தி கருத்து உடையவர் என்பதும், ஒரு முறை அவர் டிரம்பை துரோகி என விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.

* பிலிப்பைன்சின் மத்திய பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் 3 கிளர்ச்சியாளர்களும், ஒரு ராணுவ வீரரும் கொல்லப்பட்டனர்.


Next Story