உலக செய்திகள்

பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறி விபத்து 57 பேர் பலி + "||" + At least 57 killed, 65 injured in fuel tanker blast in Tanzania

பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறி விபத்து 57 பேர் பலி

பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறி விபத்து 57 பேர் பலி
தான்சானியா நாட்டில் பெட்ரோல்,டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 57 பேர் பலியானார்கள். 65 பேர் காயம் அடைந்தனர்.
தான்சானியா நாட்டின் தலைநகர் தாரிஸ் சலாமில் இருந்து மேற்கில் 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள  மொரோகோரோவில்  பெட்ரோல் டேங்கர் லாரி சரிந்து கவிழ்ந்தது. இதனால் டேங்கரில் இருந்து பெட்ரோல்  ஆறாக ஓடியது. இதை பார்த்த பொது மக்கள்  கையில் கிடைத்த பாத்திரங்களில் பெட்ரோலை பிடித்துச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரி வெடித்து சிதறியது.  இதில்  57 பேர் பலியானார்கள் 65-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் டேங்கர் லாரியில்  பெட்ரோல் பிடிக்க வந்தவர்கள் ஆவார்கள்.

இந்த விபத்து குறித்து அரசு செய்தி தொடர்பாளர் ஹசன் அப்பாசி தனது ட்விட்டர் பக்கத்தில்,   

மொரோகோரோவில் எரிபொருள் லாரி சம்பந்தப்பட்ட விபத்து குறித்த தகவலால்  நாங்கள் வருத்தமடைகிறோம்.  இந்த விபத்தில் பலர் உயிர் இழந்து உள்ளனர் என கூறி உள்ளார்.

மொரோகோரோ கிழக்கு ஆப்பிரிக்காவில் துறைமுகத்திலிருந்து சரக்குகளை மாற்றுவதற்கான ஒரு முக்கிய பாதையாகும்.