உலக செய்திகள்

அமெரிக்காவில் விமான விபத்து - இந்திய டாக்டர் தம்பதி, மகளுடன் பலி + "||" + US plane crash - Indian doctor couple, daughter killed

அமெரிக்காவில் விமான விபத்து - இந்திய டாக்டர் தம்பதி, மகளுடன் பலி

அமெரிக்காவில் விமான விபத்து - இந்திய டாக்டர் தம்பதி, மகளுடன் பலி
அமெரிக்காவில் நிகழ்ந்த விமான விபத்தில், இந்திய டாக்டர் தம்பதி, மகளுடன் பலியாகினர்.
வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டின் பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் வசித்து வந்தவர்கள் இந்தியாவை சேர்ந்த டாக்டர் ஜஸ்வீர் குரானா (வயது 60), டாக்டர் திவ்யா (54) தம்பதியர்.

இந்த தம்பதியர் கடந்த வியாழக்கிழமையன்று தங்கள் இளைய மகள் கிரணுடன் அங்கிருந்து, கொலம்பஸ் நகரில் உள்ள ஓஹியோ மாகாண பல்கலைக்கழக விமான நிலையத்துக்கு சிறிய ரக விமானத்தில் புறப்பட்டனர். விமானத்தை ஜஸ்வீர் குரானா ஓட்டினார். ஆனால் புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே அந்த விமானம், செயின்ட் லூயிஸ் என்ற இடத்தில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.


இந்த கோர விபத்தில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஜஸ்வீர் குரானா தம்பதியரின் மூத்த மகள் அவர்களுடன் விமானத்தில் செல்லாததால் உயிர் பிழைத்தார்.

பலியான ஜஸ்வீர் குரானா, திவ்யா தம்பதியர் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் பயிற்சி பெற்று 20 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்கா சென்றவர்கள் என தகவல்கள் கூறுகின்றன.