சிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள் சாயாமல், மோதாமல் பயணிக்கும்... நம்முடன் நடந்து வரும்...


சிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள் சாயாமல், மோதாமல் பயணிக்கும்... நம்முடன் நடந்து வரும்...
x
தினத்தந்தி 12 Aug 2019 10:01 AM GMT (Updated: 12 Aug 2019 10:01 AM GMT)

செயற்கை அறிவு ‘சிப்’ பொருத்தப்பட்ட, தானியங்கி முறையில் சிந்தித்து செயல்படும் சைக்கிள் உருவாக்கப்பட்டு உள்ளது.

தானியங்கி கார்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. குறிப்பிட்ட சாலைகளில் அவற்றை இயக்கும் பரிசோதனைகளும் நடந்திருக்கின்றன. இதுபோல தானியங்கி முறையில் செயல்படும் சிந்தனை சைக்கிளை சீனா அறிமுகம் செய்திருக்கிறது.

செயற்கை அறிவு சிப் மூலம், இந்த சைக்கிளை தானியங்கி முறையில் செயல்பட வைத்திருக்கிறார்கள். இவற்றால் பெடல்களை தானாக இயங்க வைத்து உருண்டு செல்ல முடியும். அதாவது நாம் நடக்கிறோம் என்றால் அதை நாம் பிடித்து உருட்டத் தேவையில்லை, தானாகவே நம்முடன் நடப்பதுபோல உருண்டு வரும். அதே நேரத்தில் பக்கவாட்டில் சாய்ந்து விடுவதும் இல்லை. வழியில் உள்ள தடைகளில் மோதுவதும் இல்லை. வேகத்தடை, மேடுபள்ளங்கள், தன் எஜமானர், மற்ற ஆட்கள் ஆகியோரின் வேறுபாட்டை உணர்ந்து செயல்பட முடியும்.

எஜமானரின் வாய்ச்சொல் கட்டளையின் படியும் செயல்படக்கூடியது. செல்போன் மற்றும் கணினி கட்டளைகளின் மூலமும் இவற்றை இயக்கலாம். இதன்மூலம் காலியான இடத்தில் தானாக சென்று பார்க்கிங் செய்து கொள்ள வைக்கலாம்.

இந்த சைக்கிள் தொழில்நுட்பத்திற்கான செயற்கை சிப், ‘நியூரோமார்பிக் சிப்’ எனப்படுகிறது. இன்டெல் நிறுவன சிப்களின் தாக்கத்தில் இந்த சிப்பை உருவாக்கி இருக்கிறார் சீன பொறியாளர் மைக் டேவிஸ். இந்த சிப்களை தயாரித்து பல்வேறு வாகனங்களையும், இன்னும் பல கருவிகளையும் செயற்கை அறிவுத்தனத்துடன் செயல்பட வைப்பதற்காக தனி நிறுவனம் ஒன்றையும் அவர் தொடங்கி உள்ளார்.

Next Story