உலக செய்திகள்

சூடானில் வெள்ள பாதிப்பு; 7 பேர் பலி + "||" + Floods cause death of 7 people in Sudan: reports

சூடானில் வெள்ள பாதிப்பு; 7 பேர் பலி

சூடானில் வெள்ள பாதிப்பு; 7 பேர் பலி
சூடான் நாட்டில் வெள்ள பாதிப்பிற்கு 7 பேர் பலியாகி உள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் தெற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி 10 கிராமங்கள் பாதிப்படைந்து உள்ளன.

கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 7 பேர் பலியாகி உள்ளனர்.  2 பேர் காயமடைந்து உள்ளனர்.  இதுபற்றி சூடான் நாட்டு சுகாதார விவகார இயக்குனர் அய்டா ஹம்சா அகமது கூறும்பொழுது, இந்த வெள்ளத்திற்கு 15 வீடுகள் சேதமடைந்து உள்ளன என தெரிவித்து உள்ளார்.