உலக செய்திகள்

பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சுவர் இடிந்ததில் 5 பேர் பலி + "||" + 6 killed, 18 injured in wall collapse amid I-Day celebrations in northern Pakistan

பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சுவர் இடிந்ததில் 5 பேர் பலி

பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சுவர் இடிந்ததில் 5 பேர் பலி
பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தின் வளாக சுவர் இடிந்ததில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
பெஷாவர்,

பாகிஸ்தான் நாட்டில் இன்று 73வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.  இதில் கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியில் அமைந்த ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் அந்நாட்டு ராணுவ கண்காணிப்பின் கீழ் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

இதில் திடீரென வளாக சுவர் இடிந்து விழுந்தது.  இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.  18 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் கில்ஜித் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.