உலக செய்திகள்

தென்கொரியாவில் ‘லிப்ட்’ அறுந்து 3 பேர் பலி + "||" + construction lift collapse, 3 killed in South Korea

தென்கொரியாவில் ‘லிப்ட்’ அறுந்து 3 பேர் பலி

தென்கொரியாவில் ‘லிப்ட்’ அறுந்து 3 பேர் பலி
தென்கொரியாவின் கிழக்கு மாகாணமான காங்வொனில் உள்ள சாக்சோ நகரில் 15 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இங்கு ஏராளமான கட்டிட தொழிலாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
சியோல்,

அடுக்குமாடி  கட்டிடத்தின் மேல் தளமான 15-வது மாடியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் கீழே இறங்குவதற்காக லிப்டில் ஏறினர். சற்றும் எதிர்பாராத வகையில் அந்த லிப்ட் அறுந்து 15-வது மாடியில் இருந்து கீழே விழுந்தது. 

இந்த கோர சம்பவத்தில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர். மற்ற 3 பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. கட்டுமான பணிகளை நிறுத்திவைத்துள்ள போலீசார் பொதுமக்கள் யாரும் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஜீயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளி பலி
ஜீயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
2. திருத்துறைப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி சமையல்காரர் பலி
திருத்துறைப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி சமையல்காரர் பலியானார்.
3. திருவட்டார் அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; மாணவர் பலி
திருவட்டார் அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாணவர் பரிதாபமாக இறந்தார்.
4. பரமக்குடியில் கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: தொழில் அதிபர்- மகள்கள் உள்பட 4 பேர் பலி
கார்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் ராமநாதபுரம் தொழில் அதிபர், அவருடைய 2 மகள்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
5. துறையூர் அருகே கோவில் விழாவுக்கு சென்றபோது பரிதாபம் கிணற்றுக்குள் வேன் கவிழ்ந்து 8 பேர் பலி
திருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசீலன் (வயது 63). இவர் திருச்சி மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.