கொரியாவின் விடுதலை தினத்தையொட்டி கிம், புதின் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்


கொரியாவின் விடுதலை தினத்தையொட்டி கிம், புதின் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்
x
தினத்தந்தி 15 Aug 2019 6:23 AM GMT (Updated: 15 Aug 2019 6:23 AM GMT)

கொரியா விடுவிக்கப்பட்ட 74-வது ஆண்டு நினைவை தினத்தை குறிக்கும் வகையில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

சியோல், 

கொரியா விடுவிக்கப்பட்ட 74-வது ஆண்டு நினைவை தினத்தை குறிக்கும் வகையில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இந்த விடுதலை தினம் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததன் மூலம் ஜப்பானிய காலனித்துவ சகாப்தத்தின் (1910-1945) முடிவைக் குறிப்பதாக கூறப்படுகிறது. இதே போல, ஜப்பானிலும் ஒவ்வொரு ஆண்டும், ஜப்பானிய காலனித்துவ சகாப்தத்தின் (1910-1945) முடிவை தேசிய நிகழ்வாக கொண்டாடுவார்கள். 

இன்று இந்தியா மட்டும்  அல்லாமல், அயல்நாடுகளான கொரியா, பகுரைன், காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் லீக்டன்ஸ்டைன் ஆகிய நான்கு நாடுகள் தங்களது சுதந்திர தேசிய நிகழ்வுகளை கொண்டாடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏப்ரல் மாதத்தில் ரஷ்யாவின் கிழக்கு நகரமான விளாடிவோஸ்டோக்கில் நடைபெற்ற முதல் உச்சிமாநாட்டின் போது கையெழுத்திடப்பட்ட ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருநாடுகளின் உறவுகளை மேலும் ஆழமாக்குவதற்கான விருப்பத்தை அவர்கள் வெளிப்படுத்தினர்.. இருநாட்டு மக்களும் ஒரு நூற்றாண்டில் இருந்து அடுத்த நூற்றாண்டிற்கு மரபுரிமையாக வந்துள்ளனர், இந்த உறவு, ஜப்பானிய எதிர்ப்பு போரின் கூட்டு போராட்டத்தில் உருவான தோழர்களின் உணர்வுகள் ஆகும்.

இதையடுத்து இருநாட்டு தலைவர்கள் கூறியதாவது:-

"கொரியாவின் விடுதலைக்காக போராடி, தங்கள்  உயிர்களை அர்ப்பணித்த கொரிய வீரர்கள் மற்றும் செம்படையின் வீரர்களின் உன்னதமான சாதனைகளை வட கொரிய மக்கள் இன்றளவும் நினைவில் வைத்திருக்கிறார்கள். ஒரு புதிய நிலைக்கு நுழைந்த இருநாட்டு உறவுகள், முந்தைய தலைவர்களின் வழியில் எதிர்காலத்திலும் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல துறைகளில் சீராக வளரும்” என்று கிம் ஜாங்-உன் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

”பியோங்யாங்கிற்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான உறவுகள் "நட்பு மற்றும் ஆக்கபூர்வமான தன்மை கொண்டவை" என்று விளாடிவோஸ்டாக் உச்சிமாநாடு தெளிவாக நிரூபிக்கிறது. உச்சிமாநாட்டின் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், கொரிய தீபகற்பத்தில் நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த உதவும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியது" என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கூறியுள்ளார்.

Next Story