உலக செய்திகள்

ரஷ்யா: பறவைகள் மோதியதால் விமானம் அவசரமாக தரையிறக்கம் + "||" + 23 injured in Russian plane's emergency landing

ரஷ்யா: பறவைகள் மோதியதால் விமானம் அவசரமாக தரையிறக்கம்

ரஷ்யா: பறவைகள் மோதியதால் விமானம் அவசரமாக தரையிறக்கம்
ரஷ்யாவில் பறவைகள் மோதியதில் விமானத்தில் சேதம் ஏற்பட்டது. இதனால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மாஸ்கோ, 

ரஷ்யாவில் 226 பயணிகள் மற்றும் 7 விமான சிப்பந்திகளுடன் சென்று கொண்டிருந்த உரல் ஏர்லைன்ஸ் விமானம், பறவைகள் மோதியதில் சேதம் அடைந்தது. விமானத்தின் என்ஜின் பகுதியில் சேதம் ஏற்பட்டதால், விமானம் அவசர அவசரமாக தரையிறக்கபட்டது. மாஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஒரு கி.மீட்டர் தொலைவில் உள்ள ஒரு விவசாய நிலப்பரப்பில் விமானம் தரையிறங்கியது.  

இதில், விமானத்தில் பயணித்த 23 பேர் லேசான காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் ஏற்படவில்லை.   சுவோஸ்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் சிம்ஃபெரோபோல் விமான நிலையத்திற்கு செல்ல இருந்தது. 


தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ரஷ்யாவுக்கு 2 நாள்கள் சுற்றுப்பயணமாக சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டுஅதிபர் புதினை சந்தித்தார்.
2. ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி, உற்சாக வரவேற்பு
2 நாட்கள் சுற்றுப்பயணமாக ரஷ்யா வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
3. ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்குவதற்கான முன்பணத்தை செலுத்தியது இந்தியா
ரஷ்யாவிடம் வான்வெளி பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கான முன்பணத்தை இந்திய அரசாங்கம் செலுத்தி விட்டதாக ரஷ்ய அரசாங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. ரஷ்யாவின் மனித வடிவிலான ரோபோ சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தது: நாசா
ரஷ்யாவின் மனித வடிவிலான ரோபோ சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தது என்று நாசா தெரிவித்துள்ளது.
5. காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு
காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா பாதுகாப்பு சபையில் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.