ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் பாகிஸ்தானைத் தொடர்ந்து சீனாவும் வேண்டுகோள்


ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலிடம்  பாகிஸ்தானைத் தொடர்ந்து சீனாவும் வேண்டுகோள்
x
தினத்தந்தி 15 Aug 2019 10:53 AM GMT (Updated: 15 Aug 2019 10:53 AM GMT)

பாகிஸ்தானைத் தொடர்ந்து சீனாவும், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்த ஐ. நா. பாதுகாப்பு சபையிடம் கேட்டுக் கொண்டுள்ளது.


காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 பிரிவை இந்திய அரசு ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.  காஷ்மீர் குறித்து விவாதிக்க பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டுமாறு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கடிதம் எழுதினார் 

பாகிஸ்தானைத் தொடர்ந்து சீனாவும், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்த ஐ. நா. பாதுகாப்பு சபையிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் ஐ.நா. தூதர்   ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும் போது இதுபோன்ற கூட்டத்திற்கான கோரிக்கை மிக சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்டது, ஆனால் அதற்கான தேதி எதுவும் இதுவரை திட்டமிடப்படவில்லை என கூறினார்.

மேலும் அவர் கூறும் போது  பாதுகாப்பு கவுன்சில் நிகழ்ச்சி நிரலில்  'இந்தியா-  பாகிஸ்தான் கேள்வி' குறித்து சீனா ரகசிய ஆலோசனை நடத்த கேட்டது.   பாதுகாப்பு கவுன்சில் தலைவருக்கு பாகிஸ்தான் எழுதிய கடிதத்தை தொடர்ந்து இந்த கோரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.

அத்தகைய கூட்டத்திற்கான சீனாவும் முறையான கோரிக்கையை சமர்ப்பித்ததாக  தூதர் கூறினார், ஆனால் இந்த  கூட்டத்திற்கு நேரம் மற்றும் தேதியை தீர்மானிப்பதற்கு முன் மற்ற கவுன்சில் உறுப்பினர்களின் விருப்பங்களை கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறினார்.


Next Story