உலக செய்திகள்

காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு + "||" + Kashmir issue- Russia in favour of India

காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு

காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு
காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா பாதுகாப்பு சபையில் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
நியூயார்க்,

நியூயார்க் ஐநா பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஐ.நா பாதுகாப்பு சபையின் இம்மாத தலைவரான, போலாந்து நாட்டைச் சேர்ந்த  ஜோன்னா ரோனெக்கா தலைமையில் 15 உறுப்பு நாடுகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் உரையாடல்கள் எதுவும் பதிவு செய்யப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆலோசனை கூட்டத்தின் முடிவில் பாகிஸ்தானுக்கு சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா தலையிடக்கூடாது எனவும் இது குறித்து இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்திற்குப் பிறகு ரஷ்ய பிரதிநிதி டிமிட்ரி போலென்ஸ்கி தெரிவித்தார்.