உலக செய்திகள்

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி + "||" + 2 killed in mysterious shooting at US university

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிர் இழந்தனர்.

* ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவாளர்களின் போராட்டம் தற்போது இருப்பதை விட மோசமானாலும் கூட தாங்களே அதனை சமாளித்து விடுவோம் என்றும், சீனாவின் தலையீடு தேவையில்லை என்றும் ஹாங்காங் போலீஸ் துறை தெரிவித்துள்ளது.

* அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிர் இழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


* இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் போலீஸ்காரர்கள் மீது பாலஸ்தீன வாலிபர்கள் 2 பேர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தினர். அதனை தொடர்ந்து, சக போலீசார் அவர்களை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் படுகாயங் களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.

* ஈரான் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

* ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணத்தில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் தலீபான் பயங்கரவாத அமைப்பின் தளபதிகளில் ஒருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.