உலக செய்திகள்

காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி + "||" + Pakistan move to rake up Jammu and Kashmir at UNSC falls flat

காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி

காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி
ஐநாவில் காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனா-பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டது.
நியூயார்க்,

ஜம்மு - காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்கும் பாகிஸ்தானின் முயற்சி ஐநா சபையில் தோல்வியில் முடிந்தது. இந்தியாவுக்கு ரஷ்யா,  பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன.  பாகிஸ்தானுக்கு முதலில் ஆதரவு தெரிவித்த சீனாவும் பின்வாங்கியது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையிடக்கூடாது எனவும் இது குறித்து இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்திற்குப் பிறகு ரஷ்ய பிரதிநிதி டிமிட்ரி போலென்ஸ்கி தெரிவித்தார். 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை, அண்மையில் மத்திய அரசு ரத்து செய்தது. காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு, இரண்டு யூனியன்  பிரதேசங்களாக மாற்றப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட வேண்டும் என வலியுறுத்தியது.

பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனாவும், காஷ்மீர் விவகாரம் பற்றி ரகசியமான முறையில் விவாதம் நடத்த கோரியது. 

அதன்படி நியூயார்க் ஐநா பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஐ.நா பாதுகாப்பு சபையின் இம்மாத தலைவரான, போலந்து நாட்டைச் சேர்ந்த ஜோன்னா ரோனெக்கா தலைமையில் 15 உறுப்பு நாடுகள்  பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் உரையாடல்கள் எதுவும் பதிவு செய்யப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதில், பேசிய ஐ.நா.வுக்கான சீன தூதர் ஜாங் ஜுன், இந்திய அரசின்  நடவடிக்கையால், ஜம்மு - காஷ்மீரில் பதற்றம் மேலும் அதிகரித்திருப்பதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவிற்கு பயங்கரவாதிகள் சந்திரனில் இருந்து வரவில்லை ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு ஆதரவு
இந்தியாவிற்கு பயங்கரவாதிகள் சந்திரனில் இருந்து வரவில்லை பக்கத்து நாட்டில் இருந்துதான் வருகிறார்கள் என ஐரோப்பிய ஒன்றியம் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.
2. வெள்ளைக்கொடி ஏந்தி வந்து மீட்டுச்சென்ற பாகிஸ்தான் வீரர்கள் - வைரலாகும் வீடியோவால் ராணுவத்துக்கு பாராட்டு மழை
காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பதிலடியில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் உடல்களை, சக ராணுவ வீரர்கள் வெள்ளைக்கொடி ஏந்தி வந்து மீட்டுச்சென்ற சம்பவம் சமீபத்தில் அரங்கேறியது.
3. பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இனப்பெருக்கம் செய்யும் நாடாக மாறியுள்ளது - பலூச் ஆர்வலர் குற்றச்சாட்டு
பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இனப்பெருக்கம் செய்யும் நாடாக மாறியுள்ளது. மேலும் நாடு சட்டவிரோதம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான அநீதிகளால் உலகத்திற்கும் குறிப்பாக அண்டை நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என பலூச் ஆர்வலர் ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார்.
4. காஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்ட விதம் தவறு - ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு
காஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்ட விதம் தவறு என ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
5. காஷ்மீர் நிலைமை குறித்து அமெரிக்கா தொடர்ந்து கவலை
காஷ்மீர் நிலைமை குறித்து அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது.