உலக செய்திகள்

”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள் + "||" + The great Akbar of India Twitter all praise for Syed Akbaruddins UNSC remarks

”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்

”இந்தியாவின் சிறந்த அக்பர்”  ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்
ஐநா இந்திய தூதர் அக்பருதீன் பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நியூயார்க்

ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின்  நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன் 370-வது பிரிவை இந்தியா ரத்து செய்த பின்னர் காஷ்மீர் முன்னேற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நடைபெற்ற ரகசிய  ஆலோசனையை  தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டி சமூக ஊடகங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.

ஒரு பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு அவர் அளித்த பதிலில் ஒன்று, "நீங்கள் எப்போது பாகிஸ்தானுடன் உரையாடலைத் தொடங்குவீர்கள்" என்று கேட்டதற்கு அளித்த பதில் பாராட்டப்பட்டது.

சையத் அக்பருதீன் நிருபர்கள் மத்தியில் நடந்து சென்று கைகுலுக்கி  நட்பின் கையை நீட்டியுள்ளோம், பாகிஸ்தானுடனான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சிம்லா ஒப்பந்தத்தில் புதுடெல்லி உறுதியாக உள்ளதாகவும், அண்டை நாடு "பேச்சுவார்த்தைகளைத் தொடங்க பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி உங்கள் இலக்கை அடைய முயற்சிப்பது  சரி அல்ல. பாகிஸ்தானுடனான பிரச்சினைகளை இருதரப்பு சார்பிலும் உரையாற்றும் இந்தியாவின் நிலைப்பாடு உலகளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது என கூறினார்.

இந்திய அரசியலமைப்பின் 370-வது பிரிவு தொடர்பான விஷயங்கள் முற்றிலும் இந்தியாவின் உள் விஷயம்.

பாகிஸ்தானுடனான உரையாடலை இந்தியா மறுப்பது குறித்து கேட்டதற்கு, நாடுகளை கையாள்வதில் சாதாரண இராஜதந்திர வழிகள் உள்ளன என்று அக்பருதீன் கூறினார்.

பயங்கரவாதம் செழிக்கும்போது எந்த ஜனநாயகமும் பேச்சுவார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாது. பயங்கரவாதத்தை நிறுத்துங்கள், பேச்சுவார்த்தைகளைத் தொடங்குங்கள் என்றார்.

அக்பருதீனின் பதிலைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியை ட்விட்டர்வாசிகள்  பாராட்டி வருகின்றனர்.

ஐநா ரகசிய ஆலோசனை கூட்டம் முடிந்தது. சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு அக்பருதீன் மட்டுமே பதில் அளித்தார். சீனா, பாகிஸ்தான் சார்பில் யாரும் பேட்டி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்

1. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ஜி 7 மாநாட்டுக்கு இடையே பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
2. ஜம்மு-காஷ்மீர் விவகாரம்: ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசி உரையாடல்
ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் தொடர்பாக , ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியில் உரையாடினார்.
3. இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் தென் மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன - ஐ.நா.
இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் தென் மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன என ஐ.நா. தெரிவித்து உள்ளது.
4. உள்ளூர் மக்களின் விருப்பப்படி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் வளர்ச்சி இருக்கும் -பிரதமர் மோடி
உள்ளூர் மக்களின் விருப்பப்படி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் வளர்ச்சி இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
5. காஷ்மீர் விவகாரம்: மத்திய அரசின் முடிவுக்கு எதிராக விஜய் சேதுபதி கருத்து
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை விஜய் சேதுபதி சாடியுள்ளார்.