36 சாலைகள் மற்றும் ஐந்து முக்கிய பூங்காக்களுக்கு காஷ்மீர் என பெயர் சூட்டும் பாகிஸ்தான்


36 சாலைகள் மற்றும் ஐந்து முக்கிய பூங்காக்களுக்கு காஷ்மீர் என பெயர் சூட்டும் பாகிஸ்தான்
x
தினத்தந்தி 17 Aug 2019 8:30 AM GMT (Updated: 17 Aug 2019 8:30 AM GMT)

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள 36 சாலைகள் மற்றும் ஐந்து முக்கிய பூங்காக்களுக்கு காஷ்மீர் என பெயர் சூட்டுகிறது.

லாகூர்,

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததையடுத்து, காஷ்மீர் மக்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்த 36 சாலைகள் மற்றும் ஐந்து  முக்கிய பூங்காக்களுக்கு காஷ்மீர் பெயரிட பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண  அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் உஸ்மான் புஜ்தார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

பஞ்சாப் மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சாலைகளுக்கு காஷ்மீர் என பெயர் வைக்கப்படுகிறது.

காஷ்மீர் பிரச்சினைக்கு கண்டனம் தெரிவித்து இந்திய சுதந்திர தினம் அங்கு கருப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டது. கடந்த 14-ந்தேதி பாகிஸ்தான் தனது நாட்டின் சுதந்திர தினத்தை காஷ்மீர் உணவு தினமாக கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

Next Story