சவுதியில் ஆளில்லா விமானங்கள் மூலம் ஷெய்பா கச்சா எண்ணெய் நிறுவனம் மீது ஏமன் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்


சவுதியில் ஆளில்லா விமானங்கள் மூலம் ஷெய்பா கச்சா எண்ணெய் நிறுவனம் மீது ஏமன் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
x
தினத்தந்தி 18 Aug 2019 10:46 AM GMT (Updated: 18 Aug 2019 10:46 AM GMT)

சவுதி அரேபியாவில் ஆளில்லா விமானங்கள் மூலம் ஷெய்பா கச்சா எண்ணெய் நிறுவனம் மீது ஏமன் கிளர்ச்சியாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

துபாய், 

ஏமன் கிளர்ச்சியாளர்களால் இயக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் நேற்று சவூதி அரேபியாவின் பாலைவனத்தில் அமைந்துள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெய்பாவை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் காயங்களோ அல்லது உற்பத்திக்கு எந்த பாதிப்போ ஏற்படவில்லை என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

ஒரு நாளைக்கு சுமார் 1 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் ஷெய்பா எண்ணெய் நிறுவனம் ஹவுத்திகளின் கட்டுபாட்டிற்கு கீழ் உள்ள பகுதிகளில் அமைந்துள்ளது. ஹவுத்திகளின் கட்டுபாட்டிற்கு கீழ் உள்ள பகுதிகளில் நடந்துள்ள இந்த தாக்குதலுக்கு ஏமன் கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்று கொண்டனர். இந்த தாக்குதல் 10 ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்டதாக ஹவுத்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இது குறித்து சவூதி எரிசக்தி மந்திரி காலித் அல்-ஃபாலிஹ் கூறியதாவது :-

"இந்த பயங்கரவாத தாக்குதல்கள், சர்வதேச எண்ணெய் விநியோகத்தை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகிறது. மேலும் இது சவுதி அரேபியாவை மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும் " என்று கூறினார்.

இதே போல், கடந்த மே- மாதம், சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான ஆரம்கோ எண்ணெய் உற்பத்தி மற்றும் வினியோக நிறுவனத்தின் மீது ஆளில்லா விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story