கஜகஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.4 புள்ளிகளாக பதிவு


கஜகஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.4 புள்ளிகளாக பதிவு
x
தினத்தந்தி 18 Aug 2019 10:15 PM GMT (Updated: 18 Aug 2019 7:55 PM GMT)

கஜகஸ்தானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.4 புள்ளிகளாக பதிவானது.

* ஹோண்டுராஸ் நாட்டின் தலைநகர் டெகுசிகல்பாவில் உள்நாட்டை சேர்ந்த இரு அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற இருந்த நிலையில், இருதரப்பு ரசிகர்களிடையே மோதல் வெடித்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டு, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் போலீசாரால் விரட்டியடிக்கப்பட்டனர்.

* அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் லாகிராங்வில்லே நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 3 பேருடன் புறப்பட்டு சென்ற சிறிய ரக விமானம், என்ஜின் கோளாறு காரணமாக அங்குள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

* தங்கள் எல்லை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த பாலஸ்தீன வாலிபர்கள் 3 பேரை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

* தாய்லாந்தின் சா கயோவ் மாகாணத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற வேன் ஒன்று, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியதில் 11 பேர் உயிர் இழந்தனர்.

* கஜகஸ்தான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.4 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.


Next Story