பிரிவு 370: காஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் சவால்


பிரிவு 370: காஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடிக்கு  பாகிஸ்தான் அமைச்சர் சவால்
x
தினத்தந்தி 19 Aug 2019 12:18 PM GMT (Updated: 19 Aug 2019 12:18 PM GMT)

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது தொடர்பாக பொதுவாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் சவால் விடுத்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை ஜம்மு–காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான்,  சர்வதேச பிரச்சினையாக்க முயற்சி செய்ததற்கு தோல்வியே மிஞ்சியது. 

இந்நிலையில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை மக்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் முகமது குரோஷி சவால் விடுத்துள்ளார். 

ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவை தளர்வு செய்து, அரசியல் தலைவர்களை விடுதலை செய்து அங்கு பொதுமக்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடி தயாரா? என சவால் விடுத்துள்ளார் முகமது குரோஷி.

இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், இனி பேச்சுவார்த்தையென்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியதாகதான் இருக்கும் என பதிவிட்டார். இதனை கண்டிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை விவகாரங்கள் அமைச்சர் முகமது குரோஷி குறிப்பிட்டுள்ளார். 

Next Story