உலக செய்திகள்

கர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் + "||" + A woman who gave birth to 3 children without knowing she was pregnant

கர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்

கர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்
கர்ப்பமானதே தெரியாமல் பெண் ஒருவர் 3 குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
நியூயார்க்,

அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தை சேர்ந்த தம்பதி ஆஸ்டின்-டேனெட் கில்ட்ஸ். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் டேனெட் கில்ட்சுக்கு கடந்த சில வாரங்களாக அடிவயிற்றில் வலி இருந்து வந்தது. அவர் தனது சிறுநீரகத்தில் கல் இருப்பதாக நினைத்துக்கொண்டார்.


இந்த சூழலில் கடந்த 10-ந்தேதி அவருக்கு வயிற்று வலி அதிகமானது. இதையடுத்து ஆஸ்டின் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்களுக்கு ஒரு ஆச்சரியமான அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவர்கள் டேனெட் கில்ட்சை பரிசோதித்தபோது அவர் கர்ப்பமாக இருப்பதும், அவர் கர்ப்பம் தரித்து 34 வாரங்கள் ஆனதும் தெரியவந்தது.

அத்துடன் டேனெட் கில்ட்சுக்கு ஏற்பட்டது பிரசவ வலி என்பதும் தெரிந்தது. உடனே அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது மற்றொரு ஆச்சரியமும் நிகழ்ந்தது. டேனெட் கில்ட்சுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. 3 குழந்தைகளும் தலா 2 கிலோ எடையில் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வயிற்றில் கட்டி இருப்பதை சரியாக பரிசோதிக்காமல் பெண் கர்ப்பம் அடைந்ததாக கூறி அரசு டாக்டர்கள் சிகிச்சை
பெண் வயிற்றில் கட்டி இருப்பதை சரியாக பரிசோதிக்காமல் கர்ப்பம் அடைந்துள்ளதாக கூறி அரசு டாக்டர்கள் 6 மாதம் சிகிச்சை அளித்த சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.