உலக செய்திகள்

“நீங்க அசிங்கமா இருக்கீங்க” - விமான பயணியை கேலி செய்த பெண் அதிகாரி பணிநீக்கம் + "||" + Airport worker fired for giving passenger 'You ugly!' note

“நீங்க அசிங்கமா இருக்கீங்க” - விமான பயணியை கேலி செய்த பெண் அதிகாரி பணிநீக்கம்

“நீங்க அசிங்கமா இருக்கீங்க” - விமான பயணியை கேலி செய்த பெண் அதிகாரி பணிநீக்கம்
விமான பயணி ஒருவரை பார்த்து, நீங்க அசிங்கமா இருக்கீங்க என்று கேலி செய்த பெண் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டார்.
நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்தவர் நீல் ஸ்ட்ராஸ்நர். இவர் வெளியூர் செல்வதற்காக அங்குள்ள ரோசெஸ்ட்டர் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றார்.

‘போர்டிங் பாஸ்’ வாங்கிய பிறகு பாதுகாப்பு சோதனை நடக்கும் இடத்துக்கு சென்றார். அங்கு பணியில் இருந்த பெண் அதிகாரி, நீல் தூரத்தில் வரும் போதே, அவரை கவனித்து, துண்டு சீட்டில் ஒரு குறிப்பு ஒன்றை எழுதி, கையில் வைத்துக் கொண்டார்.


பின்னர் நீல் அருகில் வந்ததும், அவரை ‘மெட்டல் டிடெக்டர்’ வழியாக வர சொன்னார். அதன்படி நீல் மெட்டல் டிடெக்டரை கடந்து வந்ததும், அவர் கையில் அந்த துண்டு சீட்டை கொடுத்தார். மேலும் அவரிடம் “இந்த குறிப்பை வாசிக்க போகிறீர்களா?” என்று கேட்டு சத்தமாக சிரித்தார். இதனால் குழப்பம் அடைந்த நீல் அந்த துண்டு சீட்டை பிரித்து பார்த்தார். அதில், “நீங்க அசிங்கமா இருக்கீங்க” என்று எழுத பட்டிருந்தது. அதை பார்த்து அதிர்ச்சியான நீல், உடனடியாக உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.

இதையடுத்து, “இதுபோன்ற நடத்தையை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது” என கூறி ஒப்பந்த ஊழியரான அந்த பெண் அதிகாரியை விமான நிலைய நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியது. இந்த சம்பவம் கடந்த ஜூன் மாதம் நடந்தது. பெண் அதிகாரி துண்டு சீட்டு கொடுத்தபோது கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை நீல், அண்மையில் சமூக வலைத் தளத்தில் வெளியிட்டதன் மூலம் இது வெளியுலகத்துக்கு தெரியவந்துள்ளது.