உலக செய்திகள்

அமெரிக்காவில் ருசிகரம்: ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகளுக்கு குழந்தை பிறந்தது + "||" + 9 labour unit nurses, who were pregnant at the same time while working, have given birth

அமெரிக்காவில் ருசிகரம்: ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகளுக்கு குழந்தை பிறந்தது

அமெரிக்காவில் ருசிகரம்: ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகளுக்கு குழந்தை பிறந்தது
அமெரிக்காவில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகளுக்கு குழந்தை பிறந்தது.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் நகரில் ‘மைன் மெடிக்கல் சென்டர்’ என்ற பெயரில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு வேலை பார்த்து வரும் நர்சுகள் 9 பேர் ஒரே நேரத்தில் கர்ப்பமாயினர்.


இதையடுத்து கர்ப்பிணி நர்சுகள் 9 பேரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு “எங்கள் மருத்துவ மையத்தின் 9 நர்சுகள் ஒரே நேரத்தில் கர்ப்பமாகி இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளை ஏப்ரல் மற்றும் ஜூலையில் எதிர்பார்த்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்தது.



 

இந்த புகைப்படம் அப்போது சமூக வலைத் தளத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. சமூக வலைத்தள ஆர்வலர்கள் நர்சுகளுக்கு வாழ்த்துக்கூறி அந்த புகைப்படத்தை பகிர்ந்தனர்.

இந்த நிலையில் அந்த நர்சுகள் 9 பேருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. நர்சுகள் 9 பேரும் தங்களது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைராலாகி வரும் அந்த புகைப்படம் அதிக ‘லைக்’குகளை குவித்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்கா, ஈரான் இடையே மோதல் எதிரொலி: பாரசீக வளைகுடா பகுதியில் கூடுதலாக அமெரிக்க படைகள் குவிப்பு - டிரம்ப் உத்தரவு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக பாரசீக வளைகுடா பகுதியில் கூடுதலாக அமெரிக்க படை வீரர்களை குவிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
2. அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 150 இந்தியர்கள் டெல்லி வந்தனர்
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 150 இந்தியர்கள் இன்று காலை 6 மணியளவில் டெல்லி வந்து சேர்ந்தனர்.
3. அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் தயாரித்த 2 பேராசிரியர்கள்
அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் தயாரித்த 2 பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
4. மேல் படிப்பு :2018-19ல் சீனாவிற்கு அடுத்தப்படியாக அதிகம் அமெரிக்கா சென்ற இந்திய மாணவர்கள்
2018-19ல் 2 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் மேல் படிப்பு படிக்க அமெரிக்கா சென்று உள்ளனர். இது சீனாவுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.
5. அமெரிக்காவில் பயங்கரம்: 3 மகன்களுடன் இளம்பெண் சுட்டுக்கொலை - முன்னாள் கணவர் வெறிச்செயல்
அமெரிக்காவில் 3 மகன்களுடன் இளம்பெண் ஒருவர், அவரது முன்னாள் கணவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.