ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு வங்காளதேசம் ஆதரவு


ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு வங்காளதேசம் ஆதரவு
x
தினத்தந்தி 21 Aug 2019 10:32 AM GMT (Updated: 21 Aug 2019 12:10 PM GMT)

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு வங்காளதேசம் ஆதரவு தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை ஜம்மு–காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.  இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம் என வங்காளதேசம் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

"இந்திய அரசு 370-வது பிரிவை ரத்து செய்வது அந்நாட்டின் உள்விவகாரம் என்று வங்காளதேசம் கருதுகிறது" என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பது, அத்துடன் வளர்ச்சி எல்லா நாடுகளுக்கும் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் எப்போதும் வங்காளதேசம் செயல்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story