உலக செய்திகள்

காஷ்மீர் இருநாட்டு விவகாரம்: புகார் கூறிய பாகிஸ்தானிடம் பிரான்ஸ் பதில் + "||" + France tells Pakistan Kashmir bilateral issue, calls for restraint

காஷ்மீர் இருநாட்டு விவகாரம்: புகார் கூறிய பாகிஸ்தானிடம் பிரான்ஸ் பதில்

காஷ்மீர் இருநாட்டு விவகாரம்: புகார் கூறிய பாகிஸ்தானிடம் பிரான்ஸ் பதில்
காஷ்மீர் இருநாட்டு விவகாரம் என புகார் கூறிய பாகிஸ்தானிடம் பிரான்ஸ் பதிலளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இந்திய அரசு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை பாகிஸ்தான் எதிர்த்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க ஐ.நா.வில் சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி தோல்வியை தழுவியது. இதனையடுத்து சர்வதேச நீதிமன்றத்தை நாட உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தது. இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக உள்ள பிரான்சிடம் பாகிஸ்தான் புகார் கூறியது. 

புகார் கூறிய பாகிஸ்தானிடம், காஷ்மீர் இருநாட்டு விவகாரம் என பிரான்ஸ்  பதிலளித்துள்ளது. 

பிரான்ஸ் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி லீ டிரியான் மற்றும் பாகிஸ்தான் அமைச்சர் முகமது குரேஷி ஆகியோர் தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது காஷ்மீர் விவகாரத்தில் பிரான்ஸ் நிலைப்பாட்டை விளக்கிய லீ டிரியான், "இது இருநாடுகள் இடையிலான விவகாரம், இருதரப்பு இடையிலான அரசியல் பேச்சுவார்த்தையின் கீழ் பிரச்சினைக்கு தீர்வு கண்டு அமைதியை நிலைநாட்ட வேண்டும்” என கூறியுள்ளார். பதட்டங்களை அதிகரிக்கக் கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் இருதரப்பும் தவிர்ப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார் லீ டிரியான்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரான்சில் பரிதாபம்: கர்ப்பிணியை கடித்துக்கொன்ற வேட்டை நாய்கள்
பிரான்சில் கர்ப்பிணி ஒருவரை வேட்டை நாய்கள் கடித்துக்கொன்ற பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
2. ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் நாளை தொடக்கம்
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது.
3. வரலாறு காணாத பாதிப்பு: பாகிஸ்தானில் 50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல்
பாகிஸ்தானில் 50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது வரலாறு காணாத பாதிப்பாக கருதப்படுகிறது.
4. பிரான்சில் கடுமையான பனிப்பொழிவு - மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின
பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன.
5. சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல பாகிஸ்தான் அரசு அனுமதி
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்கும் வகையில், வெளிநாடு செல்ல தடை விதிக்கும் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப் பெயர் நீக்கப்பட்டுள்ளது.