உலக செய்திகள்

ஓடும் ரெயிலில் புகைப்படம் எடுக்க இளம் பெண் சாகசம்; வைரலாகும் வீடியோ + "||" + This woman giving it ALL to the selfie cam on the train is SENDING ME

ஓடும் ரெயிலில் புகைப்படம் எடுக்க இளம் பெண் சாகசம்; வைரலாகும் வீடியோ

ஓடும் ரெயிலில் புகைப்படம் எடுக்க இளம் பெண் சாகசம்; வைரலாகும் வீடியோ
ஓடும் ரெயிலில் புகைப்படம் எடுக்க இளம் பெண் சாகசம் செய்த வீடியோ வைரலாகி உள்ளது.
ஒரு சரியான புகைப்படம் எடுப்பதற்காக நீங்கள் எந்த  அளவிற்கு செல்வீர்கள்.  மொபைலை வைத்து கொண்டு அந்த பக்கம் திரும்புவதும், இந்தபக்கம் திரும்புவதும்  என்று பல கோணங்களில் திரும்பி உங்கள் மொபைலுக்கு நீங்களே போஸ் கொடுப்பீர்கள். நியூயார்க்கில் ஒரு பெண், புகைப்படம்  சரியாக அமைவதற்கு அதற்கு மேலும்  சென்று உள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த ஜெசிகா ஜார்ஜ் ரெயிலில் பயணம்  செய்து கொண்டிருந்தபோது, சக பயணி பென் யார் அவரை பார்த்து உள்ளார். ஜெசிகா மொபைலை துடைப்பதை முதலில் கண்டார். நீண்ட நேரமாக அங்கேயும், இங்கேயும் பார்த்து  ஒரு கவர்ச்சியான போட்டோஷூட் எடுக்க அவர் ஆர்வம் காட்டினார். 

பென் யார், அவரை போட்டோஷூட்டுடன்  கூடிய வீடியோவாக எடுத்து  தனது ட்விட்டரில் வெளியிட்டார். அது 8.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் ஜெசிகாவின் நம்பிக்கையை போற்றும் விதமாகவும், நூற்றுக்கணக்கான பொறாமை கருத்துக்களுடன் வைரலாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ட்விட்டரில் வெளியிடப்பட்ட 57 விநாடி வீடியோ, ஜெசிகா கேமராவிற்கு போஸ் கொடுப்பதை காட்டுகிறது. ரெயில் நகரும் போது  குதிகாலில் நிற்பதும், பின்னர்  நகன்று போஸ் கொடுப்பதுமாக  இருந்து உள்ளார்.

படங்கள் எப்படி எடுக்கப்பட்டது  என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், ஜெசிகா அவற்றை ட்விட்டரில் வெளியிட்டார்.

போட்டோ ஷூட்டுக்கு மக்கள் பொறாமையுடன் பதிலளித்தனர், பலர் ஜெசிகாவின் நம்பிக்கையை பாராட்டினர்.

இதற்கு நன்றி தெரிவித்த ஜெசிகா, "எல்லோரும் வெளிப்படுத்திய கனிவான வார்த்தைகளால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்! இந்த நேர்மறையை பரப்பி ஒருவரையொருவர் மேம்படுத்துவோம்" என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வைரலாகும் பாட்டில் கேப் சேலஞ்ச்! அருகில் நிற்க வேண்டாம்
சமூக வலைதளத்தில் பாட்டில் கேப் சேலஞ்ச் வைரலாகி வருகிறது.
2. தாயாரின் மறுமணம் : வாழ்த்து கூறிய மகனுக்கு குவியும் பாராட்டு
தாயாரின் மறுமணம் குறித்து, அவரது மகன் பேஸ்புக்கில் பதிவிட்ட ஒரு பதிவு அனைவராலும் பாராட்டப்பட்டு, பலரின் வாழ்த்துக்களையும் குவித்துள்ளது.
3. சமூக வலைதளத்தில் நடிகை ஊர்மிளா குறித்து தரக்குறைவாக விமர்சனம்
சமூக வலைதளத்தில் நடிகை ஊர்மிளா குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
4. சமூக வலைதளத்தில் தவறாக சித்தரிப்பு: ‘அதிர்ஷ்ட ஷூ என்பதால் விரும்பி அணிந்தேன்’ - ‘தங்க மங்கை’ கோமதி விளக்கம்
சமூக வலைதளத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டதற்கு, அதிர்ஷ்ட ஷூ என்பதால் விரும்பி அணிந்ததாக, தங்க மங்கை கோமதி விளக்கம் அளித்தார்.