இந்தியாவும் பிற நாடுகளும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட வேண்டும் - டொனால்ட் டிரம்ப்


இந்தியாவும் பிற நாடுகளும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட வேண்டும் - டொனால்ட் டிரம்ப்
x
தினத்தந்தி 22 Aug 2019 5:54 AM GMT (Updated: 22 Aug 2019 5:54 AM GMT)

இந்தியாவும் பிற நாடுகளும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் கேட்டு கொண்டு உள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா, ஈரான், ரஷ்யா மற்றும் துருக்கி போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒரு கட்டத்தில் போராட வேண்டியிருக்கும். பயங்கரவாதத்திற்கு எதிரான வேலை அமெரிக்காவால் மட்டுமே செய்யப்படுகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இந்த நாடுகள் அனைத்தும் பயங்கரவாதிகளுடன்  போராட வேண்டியிருக்கும், ஏனென்றால் நாங்கள் இன்னும் 19 ஆண்டுகள் அங்கேயே இருக்க விரும்புகிறோமா? நான் அப்படி நினைக்கவில்லை. ”

ஆப்கானிஸ்தானில் இருந்து 7,000 மைல் தொலைவில் அமெரிக்கா இருந்த போதிலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அதே நேரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் அடுத்த வீடு போன்று இருந்த போதும் அவ்வாறு செய்யவில்லை. பாகிஸ்தான் மிக பக்கத்திலேயே உள்ளது. அவர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராக மிகக் குறைவாகவே போராடுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக மற்ற நாடுகள் தற்போது மிகக் குறைவான முயற்சிகளையே மேற்கொண்டு வருகின்றன. நாங்கள் தான் ஐ.எஸ்.-ஐ 100 சதவீதம்  ஒழித்தோம். அதை நான் சாதனையாக கருதுகிறேன் என்று கூறினார்.

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். மீண்டும் தோன்றுவது குறித்த கேள்விக்கு டொனால்டு டிரம்ப் இவ்வாறு பதில் அளித்தார்.

Next Story