உலக செய்திகள்

காஷ்மீர் விவகாரத்தில் 3-வது நாடு தலையிடக்கூடாது: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் + "||" + India, Pak should resolve Kashmir bilaterally, no third party should 'incite' violence: Macron

காஷ்மீர் விவகாரத்தில் 3-வது நாடு தலையிடக்கூடாது: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்

காஷ்மீர் விவகாரத்தில் 3-வது நாடு தலையிடக்கூடாது: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்
காஷ்மீர் விவகாரத்தில் 3-வது நாடு தலையிடக்கூடாது என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.
பாரீஸ்,

பிரதமர் மோடி, 2 நாள்கள் சுற்றுப்பயணமாக  பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு  நேற்று புறப்பட்டுச் சென்றார். சிறப்பு விமானம் மூலம் பாரீஸ் போய் சேர்ந்த பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். சாட்யூ டு சாண்ட்லி நகரில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது.  இரு தலைவர்களின் பேச்சு வார்த்தைக்கு பிறகு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. 

இந்த பேச்சுவார்த்தைக்கு கூட்டாக பத்திரிகையாளர்களை இரு தலைவர்களும் சந்தித்தனர். அப்போது, "காஷ்மீரில் அண்மையில் எடுக்கப்பட்ட   முடிவு பற்றி  பிரதமர் மோடி என்னிடம் விளக்கினார். காஷ்மீரில் எடுக்கப்பட்ட முடிவு இந்தியாவின் இறையாண்மையை காக்க எடுக்கப்பட்டதாகும். காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். 3-வது நாடு இந்த பிரச்சினையில் தலையிடக்கூடாது. 

வன்முறையை தூண்டும் வகையிலும் பேசக்கூடாது. ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டும்.  மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்.  சில தினங்களில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் பேச இருக்கிறேன். அப்போது, காஷ்மீர் விவகாரத்தை இரு தரப்பும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த உள்ளேன்” என்றார்.  மேலும், இந்தியாவுக்கு முதல் ரபேல் போர் விமானம் அடுத்த மாதம் ஒப்படைக்கப்படும் என்றும் மேக்ரான் தெரிவித்தார். 

இதற்கு பிறகு பேசிய பிரதமர் மோடி,  இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையேயான நட்புறவு எந்த சுயநலத்தையும் அடிப்படையாக கொண்டது இல்லை. ஆனால், 'சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்' ஆகியவற்றின் அடிப்படையில்   அமைந்தது. 

இருநாடுகளும் பயங்கரவாதத்தை தொடர்ந்து எதிர்கொள்கின்றன. மதிப்பு மிக்க ஆதரவு அளித்தமைக்காக பிரான்ஸ் அதிபருக்கு எனது நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன். பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில்  ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நாங்கள் விரும்புகிறோம்” என்றார் 

தொடர்புடைய செய்திகள்

1. கா‌‌ஷ்மீர் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் - ஐ.நா. சபை அறிவிப்பு
கா‌‌ஷ்மீர் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என்று ஐ.நா. சபை அறிவித்துள்ளது.
2. டிரம்ப் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் அடிமை மன நிலையை காட்டுகிறது ; சிவசேனா பாய்ச்சல்
டிரம்ப் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் இந்தியர்களின் அடிமை மன நிலையை காட்டுவதாக சிவசேனா விமர்சித்துள்ளது.
3. பெட்ரோல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.
4. ஜூனியர் உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன.
5. மோடியுடன் சந்திப்பு: இந்தியா-இலங்கை உறவு மேலும் வலுவடைந்துள்ளது ராஜபக்சே சிறப்பு பேட்டி
நரேந்திர மோடி உடனான சந்திப்பு இந்தியா- இலங்கை இடையேயான உறவை மேலும் வலுவடையச்செய்துள்ளதாக இலங்கை பிரதமர் ராஜபக்சே ‘தினத்தந்தி’க்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.