இந்தியா-பிரான்ஸ் இடையே கடல்சார் விழிப்புணர்வு, திறன் மேம்பாடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்து


இந்தியா-பிரான்ஸ் இடையே கடல்சார் விழிப்புணர்வு, திறன் மேம்பாடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்து
x
தினத்தந்தி 23 Aug 2019 3:20 AM GMT (Updated: 23 Aug 2019 3:20 AM GMT)

பிரதமர் மோடியின் பிரான்ஸ் சுற்றுப்பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே கடல்சார் விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

பாரீஸ்,

பிரதமர் மோடி, 2 நாள்கள் சுற்றுப்பயணமாக  பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு  நேற்று புறப்பட்டுச் சென்றார். சிறப்பு விமானம் மூலம் பாரீஸ் போய் சேர்ந்த பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். சாட்யூ டு சாண்ட்லி நகரில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது.  இரு தலைவர்களின் பேச்சு வார்த்தைக்கு பிறகு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. 

இந்த சந்திப்பின் போது இந்தியா-பிரான்ஸ் இடையே இஸ்ரோ மற்றும் பாரீஸ் தேசிய விண்வெளி ஆய்வு மையம் சார்பில் கடல்வழி போக்குவரத்தில் உள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது தொடர்பாக பிரான்ஸ் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடல்வழி போக்குவரத்தில், குறிப்பாக இந்தோ-பசிபிக் மண்டலத்தில் பாதுகாப்பை உறுதி செய்வது இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவை மேம்படுத்துவதற்கான சிறப்பான களமாகும் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, இந்திய அரசின் தேசிய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் மற்றும் பிரென்சு குடியரசின்  தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் இடையில் திறன் மேம்பாடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.


Next Story