10 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்குழந்தையே பிறக்காத கிராமம்


10 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்குழந்தையே பிறக்காத கிராமம்
x
தினத்தந்தி 23 Aug 2019 11:46 AM GMT (Updated: 23 Aug 2019 11:46 AM GMT)

போலந்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்குழந்தையே பிறக்காத கிராமம் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது.

போலந்தில் மியெஜ்சே ஆட்ர்ஸான்ஸ்கீ ((Miejsce Odrzanskie)) என்ற கிராமம் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தை பிறப்பையே பார்க்கவில்லை. கடைசியாக அந்த கிராமத்தில் அடுத்தடுத்து பிறந்த குழந்தைகள் பன்னிரெண்டும் பெண் குழந்தைகளாகவே பிறந்தன. இதற்கு அந்த கிராமத்தின் சூழல் அல்லது மரபணு தொடர்ச்சி காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், ஆண் குழந்தை பிறக்க வேண்டி அந்த கிராமத்தில் பல பெண்கள், உணவுப் பழக்கவழக்கம் உள்ளிட்ட பல மாற்றங்களை மேற்கொண்டும் பெண் குழந்தைகள் பிறப்பே அதிகரித்துள்ளது.

மாறாக போலந்தில் 2017-ல் பிறந்த குழந்தைகளில், ஒரு லட்சத்து 96 ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு 2 லட்சத்து 7 ஆயிரம் ஆண் குழந்தைகள் பிறப்பு விகிதம் இருந்ததை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Next Story