மேசை மீது காலை தூக்கி வைத்து சர்ச்சையை ஏற்படுத்திய இங்கிலாந்து பிரதமர்


மேசை மீது காலை தூக்கி வைத்து சர்ச்சையை ஏற்படுத்திய இங்கிலாந்து பிரதமர்
x
தினத்தந்தி 23 Aug 2019 11:49 AM GMT (Updated: 23 Aug 2019 11:49 AM GMT)

பிரான்ஸ் அதிபர் மாளிகையில் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சின் போது நடுவிலிருந்த மேசை மீது காலை தூக்கி வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாரீஸ்,

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சான், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேசினார்.

பிரான்ஸ் நாட்டிலுள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இம்மானுவேல் மேக்ரானிடம் ஜோக் ஒன்றை சொல்லிச் சிரித்த போரிஸ் ஜான்சன், அங்கிருந்த மேசை மீது காலை வைத்தபடி பேசியுள்ளார். போரிஸ் ஜான்சன் கூறிய நகைச்சுவைக்கு இம்மானுவேல் மேக்ரான் சிரித்துக் கொண்டிருக்க, முன்பிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த போரிஸ் ஜான்சன் கால்களை மேசை மீது தூக்கி வைத்துள்ளார். 

பேச்சுவார்த்தையை படம்பிடித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் எடுத்த அந்த புகைப்படம் தான் தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது. பிரான்ஸ் அதிபரை அவமதிக்கும் வகையில் இங்கிலாந்து பிரதமரின் செயல் அமைந்ததாக, பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story