உலக செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினாலும் சர்வதேச சமூகத்திலிருந்து பின்வாங்கமாட்டோம்- போரிஸ் ஜான்சன் + "||" + Boris Johnson will tell Donald Tusk that France and Germany are ready for Brexit talks

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினாலும் சர்வதேச சமூகத்திலிருந்து பின்வாங்கமாட்டோம்- போரிஸ் ஜான்சன்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினாலும் சர்வதேச சமூகத்திலிருந்து பின்வாங்கமாட்டோம்- போரிஸ் ஜான்சன்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினாலும் சர்வதேச சமூகத்திலிருந்து பின்வாங்கமாட்டோம் என்று இங்கிலாந்து பிரதமர் கூறினார்.
பிரான்சில் ஜி7 உச்சிமாநாடு  நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொள்ள இங்கிலாந்தின்  புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பியாரிட்ஸ் வந்திருந்தார். 

மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்னதாக போரிஸ் ஜான்சன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் நாடு எடுத்துள்ள ஜனநாயக முடிவு குறித்து சிலர் கேள்வி எழுப்புகிறார்கள், நாங்கள் உலக நாடுகளிலிருந்து விலகி நிற்போம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். சிலர், பிரிட்டனின் சிறந்த நாட்கள் கடந்து சென்று விட்டதாகவும் நினைக்கிறார்கள்.

அந்த நபர்களிடம் நான் சொல்கிறேன்,  நீங்கள் மிகவும் தவறாக நினைக்கிறீர்கள். பிரெக்சிட்டிற்குப் பிறகு உலக அரங்கில் இங்கிலாந்து ஒரு ஆற்றல்மிக்க பங்காளியாக இருக்கும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினாலும் சர்வதேச சமூகத்திலிருந்து பின்வாங்கமாட்டோம் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான ஆக்கி போட்டியில், இந்திய பெண்கள் அணி வெற்றிபெற்றது.
2. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணிக்கு 466 ரன்கள் இலக்கு
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணிக்கு 466 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி நிதான ஆட்டம்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தென்ஆப்பிரிக்க அணி நிதானமாக விளையாடி வருகிறது.
4. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணிக்கு 438 ரன்கள் இலக்கு
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணிக்கு 438 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5. இங்கிலாந்திற்கு ஐரோப்பிய ஒன்றிய துணைத் தலைவர் எழுதிய ‘காதல் கடிதம்’
பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய துணைத் தலைவர் இங்கிலாந்திற்கு ‘காதல் கடிதம்’ ஒன்றை எழுதியுள்ளார்.