கணவர் என்னிடம் தீவிரமாக அன்பை பொழிகிறார் டைவர்ஸ் கொடுங்க!! நீதிமன்றத்தை அணுகிய மனைவி!


கணவர் என்னிடம் தீவிரமாக அன்பை பொழிகிறார் டைவர்ஸ் கொடுங்க!! நீதிமன்றத்தை அணுகிய மனைவி!
x
தினத்தந்தி 24 Aug 2019 1:15 PM GMT (Updated: 24 Aug 2019 1:15 PM GMT)

கணவர் என்னிடம் தீவிரமாக அன்பை பொழிகிறார். எனக்கு டைவர்ஸ் கொடுங்க என்று மனைவி நீதிமன்றத்தை நாடிய சம்பவம் நடந்துள்ளது.

அமீரகம்,

வரதட்சணை கொடுமை உட்பட பல பிரச்சினைகளால் பெண்கள் விவகாரத்து கேட்டு நீதிமன்ற வாசலை மிதித்துள்ளனர். ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பெண் மற்ற பெண்களை விட வித்தியாசமாக இருக்கிறார்.

ஐக்கிய அரபு அமீரகம் புஜைரா நகரைச் சேர்ந்த பெயரிடப்படாத பெண் ஒருவர் டைவர்ஸ் கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். ஏன் விவகாரத்து செய்யறீங்க என்று நீதிமன்றத்தில் வக்கீல் கேட்கவும் ஒரு லிஸ்ட் போட்டு கொண்டே சென்றார். அதில் குறைகளை இல்லை. "எங்களுக்கு கல்யாணமாகி ஒரு வருடம் ஆகிறது. என்னை என் கணவர் ஒரு குழந்தை போல பார்த்துக்கொள்கிறார். இதுவரைக்கும் ஒருநாள் கூட என்கிட்ட சண்டை போடவே இல்லை.

எப்பவுமே அன்பாகவே நடந்து கொள்வார். எப்பவுமே என்னை தீவிரமாக காதலித்து கொண்டே இருக்கிறார். என்னிடம் எப்போதும் அன்பை பொழிந்து கொண்டே இருக்கிறார். அளவுக்கு அதிகமாக பாசத்தை காட்டுவது எனக்கு நரகமாக உள்ளது. என்னை எதுவுமே கடும் சொல் கூட பேச முன் வருவதில்லை.  

என்னை தினமும் காதலித்து கொண்டே இருப்பதாக என்னிடம் கூறுவார்.  ஏதாவது ஒரு காரணத்தை வைத்து கணவரிடம் சண்டை போடலாம் என நினைத்து நிறைய திட்டங்களை தீட்டினேன், அதுவும் தோல்வியில் தான் முடிந்தது. 

ஒரு கட்டத்தில் என்னை அவர் வெறுப்பதற்காக அவர் குண்டாக இருப்பார். அதனால் அதை வைத்து கிண்டல் செய்தேன். ஆனால் அவரோ உடற்பயிற்சி செய்து உடம்பை குறைத்து விட்டார். வெளியில் எங்கே போனாலும் எனக்கு மறக்காமல் பரிசு வாங்கி கொடுத்து விடுகிறார்.

ஒருநாளாவது சண்டை போடுவார்னு எதிர்பார்க்கறேன், ஒரு சண்டையும் எங்களுக்குள் வரவில்லை. இப்படி எனக்கு கட்டுப்பட்டு நடக்கும் கணவர் எனக்கு தேவை இல்லை. அதனால எனக்கு விவாகரத்து வேண்டும்" என்றார்.

இந்த வழக்கு நடக்கும்போது, அந்த பெண்ணின் கணவர் "என் மனைவி கிட்ட இருந்து என்னை பிரித்து விடாதீர்கள். நான் எப்போதும் அன்பான கணவனாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்றார்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நீதிபதி இருவரும் உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்" என்று சொல்லி வழக்கை ஒத்தி வைத்தார்.

Next Story