உலக செய்திகள்

ஈராக்கில் பயங்கரம்: மோட்டார் சைக்கிள் குண்டு வெடிப்பு; 4 பேர் பலி + "||" + Terror in Iraq: Motorcycle blast; 4 killed

ஈராக்கில் பயங்கரம்: மோட்டார் சைக்கிள் குண்டு வெடிப்பு; 4 பேர் பலி

ஈராக்கில் பயங்கரம்: மோட்டார் சைக்கிள் குண்டு வெடிப்பு; 4 பேர் பலி
ஈராக்கில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகினர்.
பாக்தாத்,

ஈராக் நாட்டில் பாபில் மாகாணத்தில் அல் முசாயப் என்ற நகரம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் மக்கள் நெரிசல் மிகுந்த சந்தைப் பகுதியில், பொதுமக்கள் ஏராளமாகக் கூடி வந்து, தங்களுக்கு தேவையான பொருட்களை மும்முரமாக வாங்கிக்கொண்டிருந்தனர்.


அப்போது மிகுந்த சத்தத்துடன் அங்கு குண்டு வெடித்தது. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. பெரும் புகை மண்டலம் உருவானது. அங்கிருந்த பொதுமக்கள் பதற்றத்துடன் நாலாபுறமும் ஓட்டம் எடுத்தனர். உடனடியாக பாதுகாப்பு படையினரும், மீட்பு படையினரும் அங்கு விரைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஏராளமான கடைகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோயின.

அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் உருக்குலைந்து போயின. கட்டிடங்கள் பெருத்த சேதம் அடைந்தன.

படுகாயம் அடைந்தவர்களை மீட்பு படையினர் மீட்பு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மோட்டார் சைக்கிளில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த குண்டுதான் வெடித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; மீனவர் பலி உறவினர்கள் திடீர் மறியல்
கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் மீனவர் பலியானார். இதையடுத்து உறவினர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 100 -ஐ எட்டியது
ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பலியானோரின் எண்ணிக்கை தற்போது 100-ஐ எட்டி உள்ளது.
3. ஈராக்: பிரதமர் தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் - மத குரு முக்ததாஅல் சதார் வலியுறுத்தல்
ஈராக் நாட்டில் பிரதமர் அதில் அப்துல் மஹதி தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என்று ஷியா முஸ்லிம் பிரிவு மத குரு முக்ததாஅல் சதார் வலியுறுத்தி உள்ளார்.
4. ஈராக் போராட்டத்தில் வன்முறை: பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு
ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
5. ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு
ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.