விண்வெளியில் நடந்த முதல் குற்றம் ; நாசா விசாரணை


விண்வெளியில் நடந்த முதல் குற்றம் ; நாசா விசாரணை
x
தினத்தந்தி 25 Aug 2019 3:44 PM GMT (Updated: 25 Aug 2019 3:44 PM GMT)

அமெரிக்க விண்வெளி நிறுவனமான ’நாசா’ விண்வெளியில் நடந்த முதல் குற்றம் குறித்த புகாரை விசாரித்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.

வாஷிங்டன், 

விண்வெளி வீரர் அன்னே மெக்லேன் மற்றும் சம்மர் வேர்டன் ஆகியோர் கடந்த கடந்த 2014- ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். பின்னர், 2018 -ம் ஆண்டு இருவரும் சேர்ந்து விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்தநிலையில் தான் மெக்லைன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தவாறு தனது பணத்தை திருடியுள்ளதாக சம்மர் வொர்டன் புகார் அளித்துள்ளார்.

இதுபற்றி மெக்லைனிடம் விசாரணை நடைபெற்றது. விண்ணில் இருந்து வங்கிக்கணக்கை இயக்கியதை ஒப்பு கொண்டதுடன், தாம் எந்த தவறும் செய்யவில்லை எனவும், சம்மர் வொர்டன் மற்றும் தனது மகனின் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை மட்டுமே பார்த்தாக அவர் மெக்லைன் கூறியுள்ளார்.

’வேர்டனும் மெக்லேனும் தம்பதிகளாக இருந்த போது ஒருங்கிணைந்த வங்கி கணக்கு ஒன்று உருவாக்கப்பட்டது. அதை மெக்லேன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த போது கண்காணித்ததை தவிர எந்த தவறும் செய்யவில்லை’ என மெக்லேனின் வழக்கறிஞர் கூறியுள்ளார். 

இது குறித்து நாசா புலனாய்வாளர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இது உறுதி செய்யப்பட்டால் விண்வெளியில் இருந்தவாறு முதல் குற்றம் நிகழ்ந்துள்ளதாக கருதப்படும். 

Next Story