உலக செய்திகள்

அமெரிக்காவில் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 வயது சிறுமி உயிரிழப்பு + "||" + An 8-year-old girl dies in a school shooting in the United States

அமெரிக்காவில் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 வயது சிறுமி உயிரிழப்பு

அமெரிக்காவில் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 வயது சிறுமி உயிரிழப்பு
அமெரிக்காவின் மிசாவுரி மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 வயது சிறுமி உயிரிழந்தார்.

* அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் உள்ள கோல்ப் மைதானத்தில் நடந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். அப்போது அங்கு திடீரென மின்னல் தாக்கியது. இதில் ஒரு மரத்துக்கு அடியில் நின்றிருந்த 6 ரசிகர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


* ஈராக்கின் அன்பர் மாகாணத்தில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.

* சிரியாவில் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரான் ராணுவ நிலைகள் மீது, ராணுவ விமானங்கள் மூலம் அதிரடி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

* அமெரிக்காவின் மிசாவுரி மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 வயது சிறுமி உயிர் இழந்தாள். மேலும் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

* அல்ஜீரியாவில் பிரபல ராப் பாடகரின் இசை கச்சேரி நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிர் இழந்தனர். இந்த சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்று அந்நாட்டின் கலாசார துறை மந்திரி மெரியம் மெர்டாசி தனது பதவியை ராஜினாமா செய்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’ கேத்தரின் ஜான்சன் மரணம்
அமெரிக்காவை சேர்ந்த பெண் கணித மேதை கேத்தரின் ஜான்சன். மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப்பட்டு வந்த இவர், வயோதிகம் காரணமாக நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 101.
2. அமெரிக்காவில் விண்ணில் பறக்க முயன்ற விமானி தவறி விழுந்து சாவு
அமெரிக்காவில் விண்ணில் பறக்க முயன்ற விமானி தவறி விழுந்து உயிரிழந்தார்.
3. அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
4. அமெரிக்காவின் நிகழ்ந்த பஸ் விபத்தில் 3 பேர் பலி - 18 பேர் படுகாயம்
அமெரிக்காவின் சாண்டியாகோ நகரில் நிகழ்ந்த பஸ் விபத்தில், 3 பேர் பலியாயினர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. அமெரிக்காவில் இளம் ‘ராப்’ பாடகர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் இளம் ‘ராப்’ பாடகர் சுட்டுக்கொல்லப்பட்டார்.