உலக செய்திகள்

“அமெரிக்கா உடன் பேச தயாராக இருக்கிறோம்” - சீனா சொல்கிறது + "||" + “We are ready to talk to the US,” says China

“அமெரிக்கா உடன் பேச தயாராக இருக்கிறோம்” - சீனா சொல்கிறது

“அமெரிக்கா உடன் பேச தயாராக இருக்கிறோம்” - சீனா சொல்கிறது
வர்த்தகப்போர் நீடிப்பதை ஏற்கமுடியாது என்றும், அமெரிக்கா உடன் பேச தயாராக இருக்கிறோம் என்றும் சீனா தெரிவித்துள்ளது.
பீஜிங்,

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஓர் ஆண்டுக்கும் மேலாக வர்த்தகப்போர் நீடிக்கிறது. வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாத காரணத்தால், இருநாடுகளும் பரஸ்பரம் வரி விதித்து பதிலடி கொடுத்து வருகின்றன.


அண்மையில், 35 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக 5 சதவீத வரி விதித்தது. அதற்கு பதிலடியாக 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களுக்கு சீனாவும் 5 சதவீதம் கூடுதல் வரி விதித்தது.

இந்த வர்த்தகப்போர் காரணமாக சீனா பெரும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பண மதிப்பு கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில், தலைநகர் பீஜிங்கில் ‘ஸ்மார்ட் சீனா’ சர்வதேச கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய அந்நாட்டின் துணை பிரதமர் லியூ ஹீ, வர்த்தகப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா தயாராக இருப்பதாக கூறினார்.

இது குறித்து அவர் பேசுகையில், “புதிய தொழில்நுட்ப துறையில் வர்த்தக பாதுகாப்புவாதத்தையும், முற்றுகையையும் சீனா கடுமையாக எதிர்க்கிறது. உற்பத்திச் சங்கிலிகளின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த சீனா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போதுள்ள பிரச்சினையை (வர்த்தகப்போர்) ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு மூலம் தீர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். வர்த்தகப் போரின் விரிவாக்கத்தை ஏற்கமுடியாது. அதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. சிரியா எல்லையில் தாக்குதல்: துருக்கி மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்கா உத்தரவு
சிரியாவில் குர்திஷ் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான துருக்கியின் ராணுவ தாக்குதலைத் தடுக்கும் நோக்கில் டிரம்ப் துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.
2. சீனாவை துண்டாட நினைப்பவர்கள் நசுக்கப்படுவார்கள் -ஜி ஜின்பிங் எச்சரிக்கை
சீனாவை துண்டாட நினைப்பவர்கள் நசுக்கப்படுவார்கள் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3. கா‌‌ஷ்மீர் பிரச்சினை பற்றி சீனா கருத்து ‘‘இருதரப்பு ரீதியில் தீர்வு காணப்பட வேண்டும்’’
கா‌‌ஷ்மீர் பிரச்சினை பற்றிய எங்கள் நிலைப்பாடு தெளிவானது. அதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் இருதரப்பு ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.
4. அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சு தோல்வி - வடகொரியா தகவல்
அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சு தோல்வியில் முடிந்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
5. அமெரிக்காவில் பயங்கரம்: மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி
அமெரிக்காவில் மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 4 பேர் பலியாயினர்.

ஆசிரியரின் தேர்வுகள்...