போர் குற்றவாளியை ராணுவ தளபதியாக்குவது போரில் பாதிக்கப்பட்டவர்களை அவமதிப்பதாகும் - ஐ.நா. நிபுணர்கள் கருத்து


போர் குற்றவாளியை ராணுவ தளபதியாக்குவது போரில் பாதிக்கப்பட்டவர்களை அவமதிப்பதாகும் - ஐ.நா. நிபுணர்கள் கருத்து
x
தினத்தந்தி 27 Aug 2019 9:29 PM GMT (Updated: 27 Aug 2019 9:29 PM GMT)

போர் குற்றவாளியை ராணுவ தளபதியாக்குவது போரில் பாதிக்கப்பட்டவர்களை அவமதிப்பதாகும் என ஐ.நா. நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொழும்பு,

இலங்கை அதிபர் சிறிசேனா, புதிய ராணுவ தளபதியாக ஷாவேந்திர சில்வாவை நியமித்தார். போர்க்குற்றவாளியான அவருக்கு ராணுவ தலைமை பதவி வழங்குவதா? என்று தமிழ் அமைப்புகள், பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதுகுறித்து ஐ.நா. நிபுணர்கள் கூறியதாவது:-

சில்வாவை ராணுவ உயர்பதவியில் நியமிப்பது போரில் பாதிக்கப்பட்டவர்களை அவமதிப்பதாகும். நாட்டில் இழப்புகளை மறக்காமல் நினைவில் வைத்திருப்பவர்களை பயமுறுத்தும் செயல். இலங்கை சமுதாயத்தின் மீதும், அரசு அலுவலகங்கள் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை வலுவிழக்கச் செய்யும் அபாயம் உள்ளது. இது நிலைமையை மேலும் சீர்குலைக்கும்.

சில்வா மீதும் அவரது படை பிரிவு மீதும் கூறப்பட்ட புகார்கள் குறித்து இன்று வரை உரிய முறையில் விசாரிக்கப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story