உலக செய்திகள்

காஷ்மீர் விவகாரம்: ராகுல்காந்தியின் அரசியல் குழப்பமானது என பாகிஸ்தான் மந்திரி குற்றச்சாட்டு + "||" + Pakistan Minister Fawad Hussain Chaudhry tells Rahul Gandhi his politics is confused, asks him to stand tall like Jawaharlal Nehru

காஷ்மீர் விவகாரம்: ராகுல்காந்தியின் அரசியல் குழப்பமானது என பாகிஸ்தான் மந்திரி குற்றச்சாட்டு

காஷ்மீர் விவகாரம்: ராகுல்காந்தியின் அரசியல் குழப்பமானது என பாகிஸ்தான் மந்திரி குற்றச்சாட்டு
காஷ்மீர் விவகாரம் ராகுல்காந்தியின் அரசியல் குழப்பமானது அவரது தாத்த நேரு போல் இருக்க வேண்டும் என பாகிஸ்தான் மந்திரி கூறி உள்ளார்.
புதுடெல்லி

அரசியல் சாசனம் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது.  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தான் உலக நாடுகளிடம் ஆதரவு திரட்ட முயன்று தோல்வியடைந்தது. 

காஷ்மீர்  விவகாரம் குறித்த  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின்  வார்த்தைகளை பாகிஸ்தான் தனது இந்தியா எதிர்ப்பு விவகாரத்திற்கு பயன்படுத்தி வருகிறது.

பாலகோட் தாக்குதலின் போது புல்வாமா பதற்றத்தில் கூட ராகுல் காந்தியின் பேச்சுக்கள் பாகிஸ்தான் அரசாங்கத்தின் ரேடியோ மற்றும் டிவிக்களால் இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்டன.

காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மசாரி ஐநாவுக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார்.  அதில் ராகுல்காந்தியின் வார்த்தைகளை சுட்டிகாட்டி எழுதி உள்ளார்.

இந்த நிலையில் திடீர் என ராகுல்காந்தி  இன்று தனது டுவிட்டரில் 

பல விவகாரங்களில் இந்த அரசாங்கத்துடன் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், இதை நான் முற்றிலும் தெளிவுபடுத்துகிறேன்: காஷ்மீர் என்பது இந்தியாவின் உள் நாட்டு பிரச்சினை மற்றும் பாகிஸ்தானுக்கோ அல்லது வேறு எந்த வெளிநாட்டிற்கோ இதில் தலையிட இடமில்லை.

ஜம்மு-காஷ்மீரில் வன்முறை நடைபெறுகிறது. ஏனெனில் இது உலகெங்கிலும் பயங்கரவாதத்தின் பிரதான ஆதரவாளராக அறியப்படும் பாகிஸ்தானால் தூண்டப்பட்டு ஆதரிக்கப்படுகிறது என கூறி இருந்தார். 

இந்த நிலையில் பாகிஸ்தான் மந்திரி ஒருவர் ராகுல்காந்தி குழப்பான அரசியல் நடத்துவதாக கூறி உள்ளார்.

பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பவாத் உசேன் சவுத்ரி தனது டுவிட்டரில் ராகுல்  "யதார்த்தத்திற்கு நெருக்கமான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். உங்கள் அரசியலில் மிகப்பெரிய பிரச்சினை குழப்பம் உள்ளது என குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். யதார்த்தத்திற்கு நெருக்கமான ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ளுங்கள்

காங்கிரஸ் தலைவர் தனது பெரிய தாத்தா ஜவஹர்லால் நேருவைப் போல தெளிவாக நிற்கும்படி கேட்டுக் கொண்டார், நேருவை இந்தியாவின் மதச்சார்பின்மை மற்றும் தாராளவாத சிந்தனையின் அடையாளமாக  இருந்ததாக கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2. காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
3. காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
4. காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை
காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
5. காஷ்மீரின் ஸ்ரீநகரில் 5 டாக்டர்களுக்கு கொரோனா
காஷ்மீரின் ஸ்ரீநகரில் 5 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.