உலக செய்திகள்

காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்சாரம் : கட்டமைப்புகளை பார்வையிட்டார் முதலமைச்சர் + "||" + Wind and solar power The Chief Minister visited the structures

காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்சாரம் : கட்டமைப்புகளை பார்வையிட்டார் முதலமைச்சர்

காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்சாரம் : கட்டமைப்புகளை பார்வையிட்டார் முதலமைச்சர்
இங்கிலாந்து நாட்டில் உள்ள காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்சார கட்டமைப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
லண்டன்

இங்கிலாந்தின் சஃபோல்க் நகரில் உள்ள ஐ.பி.ஸ்விட்ச்- ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளை அவர் பார்வையிட்டார். 

மின்சாரத்தை மின் கட்டமைப்பில் எளிய முறையில் சேர்த்திடும் வழிமுறைகள் மற்றும் அதை சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். அந்த திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தும் முறைகள் குறித்து அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களிடம் விரிவாக விவாதித்தார்.  

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சரின் செயலாளர்கள் சாய்குமார், செந்தில்குமார் ஆகியோர் இந்த நிகழ்வின் போது உடனிருந்தனர். லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்தபடி நாளை அமெரிக்கா புறப்படுகிறார். 

தொடர்புடைய செய்திகள்

1. துபாயில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 7 ஒப்பந்தம்: தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு - 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
துபாயில் நடந்த வர்த்தக தலைவர்கள் பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
2. தமிழகத்தில் தொழில் தொடங்க அமெரிக்க நிறுவனங்கள் மேலும் ரூ.2,300 கோடி முதலீடு
அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க மேலும் ரூ.2,300 கோடி முதலீடு செய்ய முன்வந்து உள்ளன. இதற்காக ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்ததானது.
3. சிறப்பு குறை தீர் திட்டத்தை சேலத்தில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
சிறப்பு குறை தீர் திட்டத்தை சேலம் வனவாசியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
4. பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி கோர்ட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி கோர்ட்டு அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
5. வீராம்பட்டினத்தில் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம்; கவர்னர், முதல்-அமைச்சர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்
வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டத்தை கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.